Banner After Header

கடவுள் இருக்கான் குமாரு – விமர்சனம்

0

kik-review1

RATING : 2.5/5

தையை எதுக்குத் தேடணும்? ”வாங்க சந்தோஷமா சிரிச்சிட்டுப் போங்க…” என்கிற பார்முலாவில் ரிலீசாகியிருக்கும் படம் தான் இந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’.

கிறிஸ்தவ பெண்ணான ஆனந்தியை லவ்வுகிறார் ஜி.வி பிரகாஷ். முதலில் முகத்தை முறுக்கும் ஆனந்தி பின்னர் காதலை ஏற்றுக்கொண்ட கையோடு ஜி.வியை தன் அப்பாவான எம்.எஸ்.பாஸ்கரிடம் சம்மதம் கேட்க கூட்டிச் செல்கிறார்.

”நீயும் உன் குடும்பமும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் என் பொண்ணை கட்டித்தரத் தயார்” என்று அவர் போடும் கண்டிஷனைக் கேட்டு கடுப்பாகும் ஜி.வி தனக்கு ரெடியாக இருக்கும் நிக்கி கல்ராணியை திருமணம் செய்யத் தயாராகிறார்.

அந்த சந்தோஷக் கழிப்பில் இருப்பவர் பேச்சுலர் பார்ட்டிக்காக தனது நண்பன் ஆர்.ஜே.பாலாஜியோடு பாண்டிச்சேரி செல்கிறார். திரும்பி வருகிற வழியில் போலீஸ்காரரான பிரகாஷ்ராஜிடம் மாட்டிக்கொள்ள, அவரிடமிருந்து தப்பித்து நிக்கியை ஜி.வி திருமணம் செய்தாரா? அல்லது மதம் மாறி பழைய காதலி ஆனந்தியை கைப்பிடித்தாரா? என்பதே கிளைமாக்ஸ்.

ஹீரோவாக வரும் ஜி.வி பிரகாஷ் ‘டார்லிங்’கில் ”இன்னும் கொஞ்சம் நடிங்க பாஸ்” என்று சொல்ல வைத்தாரே? அதே டயலாக்கைத்தான் இந்தப்படத்திலும் அவரது நடிப்பைப் பார்க்கும் போது மறக்காமல் சொல்ல வைக்கிறார். அதே சமயம் சர்ச்சில் அப்பம் வாங்குவதற்காக ”கொஞ்சம் இரு பெரிய பையை வாங்கிட்டு வர்றேன்” என்று ஆனந்தியிடம் வெள்ளந்தியாக சொல்வதும், சர்ச் பாதரிடம் தான் கிறிஸ்துவன் என்று சொல்லி மாட்டிக்கொண்டு தப்பிக்க செய்யும் தமாஷுகளும் செம! அப்புறம் ஜி.வி இனிமே ”வெர்ஜின் பசங்க…” டயலாக்கையெல்லாம் தயவு செஞ்சு எந்தப் படத்திலேயும் பேசிடாதீங்க.. தாங்ங்க…. முடியல.

உதயநிதிக்கு சப்போர்ட்டாக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’யில் சந்தானத்தை இறக்கி விட்டது போல இதில் ஜி.விக்கு நண்பராக படம் முழுக்க வருகிறார் ஆர்.ஜே. பாலாஜி. படபடவென வசனங்களைப் பேசி அலப்பறை கொடுப்பதில் கில்லாடியான அவர் விஜய் அவார்ட்சை கேலி செய்து காலி செய்யும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு சத்தம் கியாரண்டி.

இரண்டு நாயகிகள்! நிக்கிக்கு படத்தில் அவ்வளவாக வேலையில்லை. முதல் காட்சியில் கோபத்தை காட்ட ஆரம்பிப்பவர் படத்தில் அவ்வப்போது அதையே தொடர்ந்து காட்டி சூடு குறைந்து விடுகிறார்.

கலர் கொஞ்சம் கம்மியான இன்னொரு நாயகி ஆனந்தி வருகிற காட்சிகளில் எல்லாம் ரோஸ் பவுடரை கிலோ கணக்கில் அள்ளிப் பூசினால் போல அழகு. ஆனாலும் பாவாடை தாவணியில் தெரிகிற இயல்பான அழகு அந்த பேண்ட் சர்ட்டில் மிஸ்ஸிங்.

 இருபது நிமிடங்களாக வரும் ”பேசுவதெல்லாம் உண்மை” என்று டிவி ஷோவைக் கலாய்க்கும் காட்சிகளுக்கெல்லாம் எடிட்டர் யோசிக்காமல் கத்தரி போட்டிருக்கலாம்.

எந்த கேரக்டரை கொடுத்தாலும் அசால்ட் செய்யும் பிரகாஷ்ராஜூக்கு இதில் வில்லன், காமெடி என டபுள் டக்கர். மனுஷன் இரண்டிலும் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், சிங்கம் புலி, ரோபோ சங்கர் என மற்றவர்கள் வருகிற காட்சிகளில் அவரவர் வேலையில் நிறைவு.

”சிட்டியில இருக்கிற பாய்ஸ சிட்டி பாய்ஸ்ன்னு சொல்லுவாங்க, லோக்கல்ல இருக்கிற பாய்ஸை லோக்கல் பாய்ஸ்ன்னு சொல்வாங்க. ஆனால் சிட்டியிலேயே இருக்கிற லோக்கலான பாய்ஸை லொக்கலிட்டி பாய்ஸ்ன்னு சொல்வாங்க.” என ”லொக்கலிட்டி பாய்ஸ்” பாடலுக்கு நீண்ட விளக்கம் வைத்திருக்கிறார்கள்.

இசையும் ஜி.வி தான். அது டைட்டில் கார்டில் மட்டுமே இருக்கிறது, பின்னணி இசையும், பாடல்களும் ”இது ஜி.வியே இல்லப்பா…” என்கிறது. ஒண்ணு நடிங்க, இல்லேன்னா மியூசிக் போடுங்க… ரெண்டுல எதையாவது ஒண்ணை செய்ங்க ஜி.வி.

‘சிபிஎஸ்சி’ என்கிற வார்த்தைக்க்கு ‘கார்ப்பரேஷன் பாய்ஸ் ஸ்கூல் இ செக்‌ஷன்’ என்று அர்த்தம் சொல்லுவது, பி.எஸ்.என்.எல், ஜியோ சிம், அடிக்கடி உடைந்து விழும் விமான நிலையக் கண்ணாடி என சமகால நிகழ்வுகளோடு படம் முழுக்க சின்னச் சின்ன சிரிப்பு வசனங்களை தூவி தோரணம் கட்டியிருக்கிறார்கள்.  சர்ச் பாதர்ல ஆரம்பிச்சு சிம்புவின் பீப் சாங்க், விஜய் அவார்ட்ஸ் வரைக்கும் கேப்பில் கிடைத்தவர்களை எல்லாம் கொத்துக்கறி போட்டிருக்கிறார்கள் டைரக்டர் எம். ராஜேஷ் – ஜி.வி – ஆர்.ஜே பாலாஜி கலாய் கூட்டணி!

பொதுவா ரிலீஸ் ஆகிற படங்கள்ல லாஜிக் பார்க்கக் கூடாதுன்னு தான் சொல்லுவாங்க, ஆனா இந்தப்படத்துல கூடவே கதையையும் தேடாதீங்க. அப்படி யோசிக்காமப் போனா ரசிகர்களின் டைம் பாஸூக்கு ”டைரக்டர் ராஜேஷ் கேரண்டி தான் குமாரு!”

Leave A Reply

Your email address will not be published.