‘கார்த்தி 19’ – பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்!

‘தேவ்’ படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராததால் அப்செட்டாகி உட்காராமல் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி விட்டார் நடிகர் கார்த்தி.

ஏற்கனவே வித்தியாசமான கதையம்சத்தோடு தயாராகி வரும் ‘கைதி’ என்ற படத்தில் நடித்து வரும் கார்த்தி, அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ரொமோ படத்தை கொடுத்த பாக்யராஜ் கண்ணன் உடன் கை கோர்த்திருக்கிறார்.

Related Posts
1 of 178

எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையான இப்படத்தில், கார்த்தி ஜோடியாக ரஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். விவேக்-மெர்வின் இசையமைக்கிறார்.

தற்காலிகமாக ‘கார்த்தி 19’ என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மார்ச் 14-ம் தேதி ஆரம்பமானது. தொடர்ந்து சென்னை மற்றும் பல பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் சில இடங்களில் பெரிய செட் போடப்படுகிறது. அதிக பொருட்செலவில் இப்படத்தை ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிக்கிறது.