செல்போனிலும் பேய் வந்து மிரட்டும் கதை : ‘கேட்காமலே கேட்கும்’

0

ketkamale

சினிமா வந்த காலத்திலிருந்து பேய்க்கதைகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் எப்போதும் ஒரு தனி மவுசு இருக்கும்.

பேய்க்கதைகள் என்பது ஆவி இன்னொரு உடம்புக்குள் ஊடுருவி பலி வாங்கும். இதுதான் நாம் பார்த்த பல பேய்ப்படங்களின் கதையாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் கதை வழக்கமானது அல்ல.

புதுமுகங்கள் கிரண், திவ்யா, வந்தனா, பிரக்னா என்.பாபு, மஞ்சுநாத், மது, ஜெயராஜ், பைரக கவுண்டர், நாகராஜ் ஆகியோர் நடித்துள்ள ’கேட்காமலே கேட்கும்’ படத்தில் பேய் தொழில்நுட்பத்தில் வந்து மிரட்டுமாம்.

ஆமாம் இதில் பேய் ஒரு செல்போனிலிருந்து ஊடுருவி இன்னொரு செல்போனுக்கு செல்கிறது, அந்த வகையில் ஹாரர் படத்தின் அடையாளத்தையும் கொஞ்சம் மாறுபட்டு யோசித்திருக்கிறார் இயக்குநர் கே.நரேந்திர பாபு. செல்போனில் பேய் ஊடுருவும் காட்சிகள் பார்ப்பவர்கள் திகில் கொல்லும் அளவுக்கு மிரட்டப்பட்டிருக்கிறது. கதைக்கேற்ப டெக்னாலஜிகள் நிறைய பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

சென்னை, மன்னார், கொடைக்கானல், கர்நாடக மடக்கேரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் இயக்குனர் கர்நாடகாவில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். அதில் மூன்று படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றவை.

ஒளிப்பதிவு சந்தோஷ், இசை கிரிதர்திவான், எடிட்டிங் கே.கிரிஷ் குமார் பாடல் பாரதிவள்ளி. இணை தயாரிப்பு எஸ்.குரு ராஜ், ஜி.சசிகாந்த், ஜி.கிருஷ்ணமூர்த்தி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்கியிருக்கிறார் கே.நரேந்திர பாபு. சிவி பிலிம்ஸ் சி. வெங்கடேஷ் தயாரித்திருக்கிறார்.

Leave A Reply