என் மீதான இயக்குநர்களின் பார்வை மாறியிருக்கிறது! : விதார்த்துக்கு ‘குற்றமே தண்டனை’ கொடுத்த கிப்ட்!

Get real time updates directly on you device, subscribe now.

vidharth1

ன்றைக்கும் ”காக்கா முட்டை” என்றால் ரசிகர்களின் நினைவலைகளில் வந்து போவது அந்தச் சிறுவர்கள் மட்டுமல்ல… அப்படத்தின் இயக்குநர் மணிகண்டனும் தான்.

அந்தளவுக்கு ஒரு யதார்த்தப் படமாகத் தந்த மணிகண்டனின் அடுத்த முயற்சி தான் ”குற்றமே தண்டனை.”

விதார்த் ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் நாளை உலகமெங்கும் ரிலீசாகிறது. முன்னதாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்ய நல்ல சினிமாக்களை தேடிப்பார்க்க ஆசைப்படுகிற ரசிகர்கள் இருக்கும் அத்தனை ஏரியாக்களிலும் ரிலீஸ் செய்கிறது கே.ஆர்.பிலிம்ஸ்.

”காக்கா முட்டை” இயக்குநரின் படமென்றால் கண்டிப்பாக அந்தப் படம் மீதான எதிர்பார்ப்போடு தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். அதை இது பூர்த்தி செய்யுமா..?

கண்டிப்பாக.., ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்குமான கதைக்களத்தை மாற்றியே ஆக வேண்டும். தமிழ்சினிமாவில் வெறும் ஆறே ஆறு கதைகளை வைத்து படங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. இன்னும் எவ்வளவோ கதைகள் படமாக்கப்படாமல் இருக்கின்றன. என் படங்கள் அப்படிப்பட்ட கதைகளை தேடிப்பிடித்து ரசிகர்களுக்கு தருவதாக இருக்கும். அப்படித்தான் ‘காக்கா முட்டை’ படத்திலிருந்து ‘குற்றமே தண்டனை’ படம் முற்றிலும் வேறுபட்ட கதையம்சம் கொண்ட படமாக இருக்கும்.
என்று சொல்லும் இயக்குநர் மணிகண்டன் காக்கா முட்டை படத்துக்கு முன்பாகவே இந்தப் படத்துக்கான வேலைகளை ஆரம்பித்து விட்டாராம்.

படத்துல பாடல்களே இல்லை. ஆனால் இளையராஜா சாரோட பின்னணி இசையில் உயிர்ப்பு இருக்கும். படத்தோட காட்சிகள்ல பல இடங்கள்ல சைலன்ஸ் தேவைப்பட்டப்போ என்னோட சாய்ஸ் இளையராஜா சார் தான் பெஸ்ட்டுன்னு தோணுச்சு. அது படத்துக்கு சரியாகவும் இருந்துச்சு என்றார்.

Related Posts
1 of 14

பல படங்கள் ஹீரோவாக நடித்திருந்தாலும் மைனாவுக்குப் பிறகு உங்களுக்கு நல்ல படங்கள் அமையலையா என்கிற கேள்வி ஹீரோ விதார்த்திடம் எல்லோருக்குமே உண்டு.

அந்தக் கேள்விக்கு பதிலாக அமைந்திருப்பது தான் இந்த குற்றமே தண்டனை என்பது கூடுதல் சிறப்பம்சம்.

மைனாவுக்குப் பிறகு என்னோட கேரியரைப் பத்தியும், படங்களைப் பத்தியும் நெறைய பேர் இண்டஸ்ட்ரியில கேள்வி எழுப்புனாங்க. ஆனா என்னைக்கு குற்றமே தண்டனை படத்துல அதுவும் மணிகண்டன் சாரோட இயக்கத்துல நடிக்கிறேன்னு தகவல் வந்துச்சோ அன்னைக்கே எனக்கு நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சுன்னு சொல்லலாம்.

மணிகண்டனே விதார்த்தை செலெக்ட் பண்ணிட்டாப்லன்னு இப்போ என்னை நெறைய டைரக்டர்கள் அவங்களோட படங்களுக்கு அப்ரோச் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. அதெல்லாம் எனோ தானோன்னு கதைகளா இல்லாமல் நல்ல கதைகளாக இருக்கு. அந்தளவுக்கு என் மீதான இயக்குநர்களோட ரெகுலர் பார்வை குற்றமே தண்டனை படத்தால மாற ஆரம்பிச்சிருக்கு. இது என்னோட கேரியரை அடுத்த லெவலுக்கு கொண்டு போகும் என்றார் விதார்த்.

அப்போ ”குற்றமே தண்டனை” அல்ல…

”மகிழ்ச்சி!”