லதா ரஜினிகாந்த் நடத்திய சிறப்பு யாகம்! – எதற்காகத் தெரியுமா?

0

போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்ன ரஜினி திடீரென்று போரே வராமல் அரசியலில் குதிக்கப் போகிறேன் என்று அறிவித்து விட்டார்.

அந்த அரசியல் பிரவேச அறிவிப்பைத் தொடர்ந்து மாவட்டம் வாரியாக தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை நியமித்து வருகிறார். 32 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமித்த பிறகு மாநில நிர்வாகிகள் நியமனமும் விரைவில் நடைபெற உள்ளது.

தலைமை மன்றத்தில் இருக்கும் முக்கிய பொறுப்பாளர்களிடம் இந்த நியமன வேலைகளை கொடுத்து விட்டு, மன நிம்மதிக்காக இமயமலை சென்று வந்தார் ரஜினி.

இப்படி தன் நிம்மதிக்காக ரஜினி சென்று வர அவரது மனைவி லதா ரஜினிகாந்த்தோ தமிழ்நாட்டின் நிம்மதிக்காக சிறப்பு பூஜை ஒன்றை நடத்தி வியக்க வைத்திருக்கிறார்.

இதற்காக நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்ற லதா ரஜினிகாந்த் அங்கு சிறப்பு பூஜைகளை நடத்தினார். லதா ரஜினிகாந்த் முன்னிலையில் நடராஜா சாஸ்திரி இந்த பூஜையை செய்தார்.

பூஜைக்கு பின் பேசிய லதா ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் நன்மை மற்றும் தற்போது உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும் என்று இந்த யாகத்தை நடத்தியதாகக் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.