கார்த்திக் சுப்பராஜின் உதவியாளர் இயக்கத்தில் தமிழுக்கு வரும் மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்

0

‘நளனும் நந்தினியும்’, ‘சுட்டக்கதை’ படங்களை தொடர்ந்து ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தயாரித்துள்ள பிரம்மாணடாமான நகைச்சுவை திரைப்படம் “நட்புனா என்னன்னு தெரியுமா”. விஜய் டிவி புகழ் கவின் ராஜன் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் சிவா அரவிந்த். வரும் மார்ச் மாதம் உலகமெங்கும் படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் சார்பாக தனது “லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் – புரொடக்‌ஷன் No.4 ” படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி வெற்றிப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜின் இணை இயக்குநர் விஜயராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இப்படத்தின் பிரபல மலையாள தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புகழ்பெற்ற “Dance 4 Dance” நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ”சென்னை 2 சிங்கப்பூர்” படத்தில் நடித்த அஞ்சு குரியன் நடிக்கின்றார். மேலும் இவர்களுடன் ஈரோடு மகேஷ், குரேஷி, ஈஸ்வர ரகுநாதன், நிம்மி இமானுவேல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Leave A Reply