‘என் நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது!’ : மணிரத்னத்திடம் போராடும் லைட்மேன்!

0

maniratnam1

ன்னும் கொஞ்சம் இடைவெளி விட்டு படம் இயக்கினால் போதும் என்கிற நிலைக்கு மணிரத்னத்தை கொண்டு வந்து விட்டது ‘காற்று வெளியிடை’ படத்தின் நெட் ரிசல்ட்!

‘ஓ.கே கண்மணி’ போல எதிர்பார்த்த வசூலைத் தராத வருத்தத்தில் இருக்கும் மணிரத்னத்துக்கு இன்னொரு பிரச்சனையும் லைட்மேன் உருவில் சூழ்ந்திருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய்பச்சன் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு ரிலீசான படம் ‘குரு.’

இந்த படத்தில் லைட்மேனாக பணியாற்றிய மணிமாறன் என்பவருக்கு படப்பிடிப்பின் போது, ரத்தம் சம்பந்தமான தொற்று நோய் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ செலவுகளை கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். மருத்துவ செலவுக்காக தனக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று இயக்குநர் மணிரத்னம் மற்றும் லைட்மேன் சங்கத்திற்கு அவர் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் இருதரப்பினரும் மணிமாறனை கண்டு கொள்ளாததால் லைட்மேன் சங்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மணிமாறன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் மணிமாறனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தும் 1 லட்சம் ரூபாயை மட்டுமே மணிமாறனுக்கு கொடுத்திருக்கிறது லைட் மேன் சங்கம்.

இந்த நிலையில் தனக்கு ‘குரு’ படத்தில் பணியாற்றிய போதுதான் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், எனவே தன்னுடைய இந்த நிலைக்கு மணிரத்னம் தான் பொறுப்பு. அதனால் எனக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். அல்லது என்னுடைய முழு சிகிச்சைக்கான செலவையும் அவர் ஏற்றுக் கொண்டு என்னை பழையபடி வேலை செய்யக்கூடிய அளவுக்கு குணமாக்கி விட வேண்டும். என்கிறார்.

‘நாயகன்’ படத்தில் நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை என்று வக்கனையாக வசனம் வைக்கின்ற மணிரத்னம் நிஜ வாழ்க்கையில் ஒரு பத்து ரூபாய் கொடுத்து வாழ வைக்கிறதுக்கு துப்பில்லை. அப்படின்னா இவர் எப்படிப்பட்டவரா இருப்பார்? என்று கடுமையாகச் சாடியிருக்கிறார்.

அதோடு எனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை இனி யாருக்கும் வரக்கூடாது. எனக்கான உதவியை அவர் செய்யவில்லை என்றால் அவர் வீட்டின் முன்பு தற்கொலை செய்ய உள்ளதாகவும் மணிமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரின் இந்தப் பேச்சு தமிழ்சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மணி சத்தம் ஒலிக்கட்டும்.., மணிமாறன் வாழ்வு சிறக்கட்டும்!

Leave A Reply