மாஃபியா-விமர்சனம்

RATING 2.5/5

பத்து ஸ்லோமோஷன் ஷாட்ஸ் வச்சா அது மங்காத்தா படம் மாதிரி பீல் கொடுக்கும்னு யாரு சொல்லிக்கொடுத்தாங்களோ தெரியல..மாஃபியா எங்கும் வச்சி செய்யப்பட்டிருக்கும் முதல் சம்பவம் இது.

Related Posts
1 of 7

சிறப்பான நடிப்பாலும் தன் பன்ச் பைட்-களாலும் கலக்கி இருக்கிறார் அருண் விஜய். பிரசன்னாவும் தன் பங்களிப்பை விடாக்கண்ணனாக வழங்கி இருக்கிறார். பிரியா பவானி சங்கர் செம்ம அழகு. பெரிய வேலை இல்லாவிட்டாலும் க்ளைமாக்ஸில் பெரிய வேலையைச் செய்து அசத்துகிறார். குட்டிக் குட்டிக் கேரக்டர்கள் யாரும் பெரிதாக மனதில் ஒட்டவில்லை. படத்தின் மேக்கிங் பிரம்மாதம். அது சரி கதை? சொல்வோம் சொல்வோம்!

மாஸ் காட்சிகளுக்கு முதல் ஆதர்சமே பின்னணி இசை தான். அதை ஓரளவு சரியாகச் செய்துள்ளார் இசை அமைப்பாளர். ஒளிப்பதிவில் தனித்துவம் தெரிகிறது. படத்தின் கலரிங்கும் ஒரு திரில்லர் பட பீலைத் தரத் தவறவில்லை. சரி கதை?

மாஃபியா கும்பலைக் கண்டு பிடித்து ஹீரோ வேட்டையாடுவார் அதுதான் கதை? அட இது தர்பார் கதையாச்சே என்றெல்லாம் கேட்டால் நோ கமெண்ட்ஸ். ஏன்னா தர்பார் கதையே தாறுமாறு கதை அல்லவா?

படத்தில் எந்தக் கேரக்டரையும் உள்வாங்கவே முடியவில்லை..காரணம் திரைக்கதை அவ்வளவு உள்வாங்கி கிடக்கிறது. லாஸ்ட்ல ஒரு ட்விஸ்ட் வச்சிருக்கார் இயக்குநர். செம்ம..ஆனால் அதுக்குள்ள பாதிப்பேரு தியேட்டரை விட்டு வெளில வந்திருவாங்க!