மாஸ்டர் விழாவில் விஜய் ஏன் அரசியல் பேசவில்லை?


விஜய்பட ஆடியோ லான்ச் என்றால் எதோ ஒரு அரசியல் தலைவர் மீட்டிங் ரேஞ்சிற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெற்றது. ஆடியோ விழாவில் விஜய் அவருக்கு சில வாரங்களுக்கு முன் நடந்த ரெய்டு விசயங்கள் பற்றியும், தற்கால அரசியல் பற்றியும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய் படம் தவிர வேறு எதைப்பற்றியும் பேசவே இல்லை.. “உண்மையா இருக்கணும்னா சில நேரத்துல ஊமையா இருந்திடணும்” என்ற ஒரு பன்ச் டயலாக்கோடு நிறுத்திக் கொண்டார்.

Related Posts
1 of 110

விஜய் அரசியல் பேசாமல் தவிர்த்ததிற்கும் சிலர் பல விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். “ஆக்‌ஷுவலா புரொடியூசர் விஜய்க்கு மாமா. அதான் அவர் அடக்கி வாசிச்சார். இதே மாஸ்டர் வேறு தயாரிப்பாளர் படமா இருந்தா நிச்சயம் அரசியல் பேசி இருப்பார்” என்கிறார்கள். விஜய் பேசினாலும் சர்ச்சை பேசாட்டாலும் சர்ச்சை!