கண்டிஷன் போட்ட கெளதம் மேனன் : கண்டு கொள்ளாத சென்னைப் பொண்ணு!

0

gowtham1

முன்பெல்லாம் புதுமுக நடிகை என்றால் முதல் படத்தில் கமிட்டாகும் போது அப்படத்தின் இயக்குநர் போடும் கண்டிஷன்களுக்கு ஓ.கே சொல்வார்கள்.

அதிலும் முக்கியமானது அந்தப் படம் ரிலீசாகும் வரை வேறு புதுப்படங்களில் கமிட்டாகக் கூடாது என்கிற கண்டிஷன் தான்.

இது அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகப்படுத்தும் என்பது ஒருபுறமிருந்தாலும் அதனால் அந்த நடிகை புதுப்பட வாய்ப்புகளையும் ஏற்க முடியாத சூழல் ஏற்படும்.

ஆனால் சமீபகாலமாக வரும் புதுமுக நடிகைகள் இயக்குநர்களின் இந்த கண்டிஷனை தில்லாக எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்படித்தான் புதுமுகம் மேகா ஆகாஷிடம் கண்டிஷனைப் போட்டு நோஸ்கட் வாங்கியிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.

தமிழில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்து வருகிறார் புதுமுகம் மேகா ஆகாஷ்.

இப் படத்தின் ஸ்டில்களைப் பார்த்ததும் ஆளாளுக்கு மேகாவை தங்கள் படங்களில் கமிட் செய்ய படையெடுக்க ஆரம்பித்து விட்டது இயக்குநர்கள் வட்டம்.

விஷயத்தை கேள்விப்பட்ட கெளதமோ இந்தப்படம் ரிலீசாகும் வரை வேறு புதுப்படங்களில் கமிட்டாகக் கூடாது என்று கண்டிஷன் மேகாவுக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார்.

ஆனால் மேகாவோ கெளதம்மேனன் சொன்னதை கண்டு கொள்ளாமல் சொன்னதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் ஒரு பக்க கதையில் நாயகியாகி விட்டார். அதோடு அவரைப்போல நல்ல கதையோடு வரும் இயக்குநர்களிடம் கதை கேட்டு கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

தில்லான சென்னைப் பொண்ணு!

Leave A Reply