ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி “


Take Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி ”

ஜித்தன் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர்.

Related Posts
1 of 6

படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..

“முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்” என்றார்