அப்பா கார்த்திக்குடன் கெளதம் கார்த்திக் நடிக்கும் ‘சந்திர மெளலி’

0

mr chandramouli

டிகர் கார்த்திக் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. திரு இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் மற்றும் டிஸ்டிரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்செயன் தயாரிக்கிறார்.

கெளதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கஸ்ஸான்ட்ரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் முக்கியமான, பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கவுள்ளார் . தேசிய விருது பெற்ற இயக்குனர்கள் மகேந்திரனும் அகத்தியனும் இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இக்கதையில் நடிகர் சதீஷ் தனது பாணி காமெடியில் அசத்தவுள்ளார். இந்த மெகா கூட்டணி ரசிகர்களை ஒரு விருந்தாக இருக்கும் என நம்பப்படுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் தலைப்பு ”மிஸ்டர் சந்திரமௌலி” என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலங்களை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் என்றுமே இருக்கும் பெயர் இது . இது குறித்து இப்படத்தின் இயக்குனர் திரு பேசுகையில், ” இப்படத்தின் நடிகர்கள் கூட்டணி படத்திற்கு தூணாக அமைந்து படத்தை அடுத்த லெவெலுக்கு கொண்டுபோயுள்ளது. இயக்குனர் மகேந்திரன் சார், கார்த்திக் சார் மற்றும் அகத்தியன் சார் போன்ற ஜாம்பவான்களோடு பணிபுரிய வாய்ப்பு கிட்டியுள்ளதை நினைத்தால் மிக பெருமையாக உள்ளது. எனக்கு பல மடங்கு பொறுப்பும் அதிகரித்துள்ளது. ” என்று நம்பிக்கையோடு கூறினார் இயக்குனர் திரு.

Leave A Reply