அனிருத்தும் இல்லை, யுவனும் இல்லை – ‘விஸ்வாசம்’ படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

0

‘விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித் – இயக்குநர் சிவா கூட்டணியில் நான்காவது படமாக தயாராகும் படம் ‘விசுவாசம்.’

‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்க உள்ளார் என்று சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். படத்துக்கு பூஜை போடப்பட்டதிலிருந்தே இப்படத்துக்கு இசையமைக்கப்போவது யார் என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.

அனிருத் தான் இந்தப் படத்திலும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் யுவன் ஷங்கர் ராஜா பெயரும் அடிபட்டது. தற்போது, அந்த இருவருமே இல்லை. விசுவாசம் படத்திற்கு டி. இமான் தான் இசையமைக்கப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமோ, இயக்குநர் சிவாவோ இதுவரை உறுதிப்படுத்தவில்லை. ஒருவேளை அஜித் – சிவா கூட்டணியில் டி.இமான் இணைவது உறுதியானால், அஜித்துடன் அவர் கைகோர்க்கும் முதல் படம் ‘விசுவாசம்’ ஆக இருக்கும்.

படப்பிடிப்பு இம்மாதம் பிப்ரவரி 22-ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. படம் இந்தாண்டு தீபாவளியன்று ரிலீசாக உள்ளது.

Leave A Reply