அதிகாரப்பூர்வமா அறிவிச்சாச்சு… – ‘விசுவாசம்’ படத்தில் அஜித் ஜோடியானார் நயன்தாரா!

0

ஜித் – இயக்குநர் சிவா கூட்டணி நான்காவது முறையாக இணையும் திரைப்படம் ‘விசுவாசம்’.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்படத்தின் டைட்டிலை முன்னதாகவே அறிவித்து விட்ட இயக்குநர் சிவா கடந்த ஜனவரி மாதம் வரை படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார். தற்போது அந்தப் பணியும் முழுமையாக முடிந்து விட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப் போகும் ஹீரோயின் யார் என்பது அஜித் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் படத்தின் நாயகி யார் என்கிற தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆமாம், விசுவாசம் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

ஏற்கெனவே பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் அஜித்துடன் நடித்த நயன் தாரா இயக்குநர் சிவாவைப் போலவே நான்காவது முறையாக அஜித்துடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்பட இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பி, ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

Leave A Reply