Banner After Header

நேர் முகம் – விமர்சனம்

0

ner-mugam-review-2

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை , வெளியில் சொல்லிக் கொள்கிற மாதிரியான சில படங்களில் நடித்த நாயகிகள் மீனாட்சியும், மீரா நந்தனும் மார்க்கெட் அவுட்டாகிப் போய் கிடைக்கிற சம்பளத்தில் கமிட்டாகி புதுமுக நாயகன் ரபிக்காக இறங்கி வந்து ஷோ காட்டியிருக்கும் படம் தான் இந்த ‘நேர்முகம்’.

‘நேர்முகம்’ என்ற டைட்டிலுக்கான அர்த்தத்தை கதையின் எந்த மூலையிலும் பார்க்க முடியவில்லை. ஆனால் ஒரு க்ரைம் த்ரில்லருக்குரிய பில்டப்போடு காட்சிகளை நகர்த்தி தமிழ்சினிமாவில் லேட்டஸ்ட் சீசனுக்கு ஏற்றாற்போல் மேட்ச் பண்ண முயற்சித்திருக்கிறார் இயக்குநர் முரளி கிருஷ்ணா.

”ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்குப்பா…” என்று ஹீரோ ரபியும், ஹீரோயின் மீனாட்சியும் மனோதத்துவ டாக்டர் ஆதித்யா மேனனிடம் ட்ரீட்மெண்ட்டுக்காக செல்கிறார்கள். அவரோ அந்த காதல் ஜோடியை தனக்கு சொந்தமான ஹெஸ்ட் அவுஸ் ஒன்றில் அடைத்து வைக்கிறார்.

அங்கு செல்லும் காதல் ஜோடி தங்களைப் போலவே பல காதல் ஜோடிகள் அதே கண்டிஷனில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைய, இங்கு என்ன நடக்கிறது? எங்களுக்கு ட்ரீட்மெண்ட் என்னாச்சு? என்று யார் கேள்வி கேட்டாலும் டாக்டர்கிட்ட கேட்டுக்க என்று மட்டுமே பதில் வரும். மீறி கேட்டால் கோட்டு சூட் போட்ட அடியாட்களை வைத்து நையப்புடைக்கிறார் மேற்படி டாக்டர்.

எதற்காக அந்த டாக்டர் அப்படி செய்கிறார்? அதன் பின்னணி என்ன? அந்த பங்களாவில் நடப்பது தான் என்ன? என்பதே அடுத்தடுத்த காட்சிகளோடு முடியும் கிளைமாக்ஸ்.

ப்ளாஷ்பேக் தவிர்த்து சென்னைக்கு ஒதுக்குப்புறத்தில் இருக்கிற ஒரு பங்களாவைச் சுற்றித்தான் மொத்த கதையும் நகர்கிறது. படம் ஆரம்பித்து அடுத்து முக்கால் மணி நேரம் வரும் காட்சிகள் ஏதோ ஒரு க்ரைம் த்ரில்லருக்குரிய பில்டப்போடு சென்றாலும் அதற்கான மிரட்டலான காட்சிகள் கேமராவின் எந்த ஆங்கிளிலும் பதியாததால் படம் பார்க்கிற நமக்கு அந்த பய உணர்வே வராமல் கெக்கே பிக்கேவென்று சிரிக்க ஆரம்பித்து விடுகிறோம்.

ஹீரோ ரபி நடிக்க முயற்சிப்பதை வரவேற்கலாம். காதல் காட்சிகளில் தேவலாம். ஆனால் அவரே சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் பாருங்கள். அதைத்தான் படம் பார்க்கும் ரசிகர்களை போதும்டா சாமீ… என்று கதற வைக்கிறது.

இரண்டு நாயகிகளில் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைப்பது ப்ளாஷ்பேக்கில் வரும் மீரா நந்தன் தான். சேலை கட்டிய அழகுப் பெண்ணாக, புன்னகை தவழும் முகமுமாக மொத்த படத்தில் ஒரே ஆறுதல் அவர். ‘காக்கா முட்டை காக்கா முட்டை’ பாடலில் உடல் பெருத்து குத்தாட்டம் போட்ட மீனாட்சி இதில் ஏதோ சுகர் வந்த பிகர் போல வித் – அவுட் மேக்கப்பில் பரிதாபமாக காட்சியளிக்கிறார்.

காணாமல் போகும் காதல் ஜோடிகளை கண்டுபிடிக்கும் காவல்துறை அதிகாரியாக வருகிறார் பாண்டியராஜன். கூடவே வரும் நெல்லை சிவா, சிசர் மனோகர் இருவரும் காமெடிக்காக கமிட்டானவர்கள் என்று தெரிகிறது. ஆனால் காமெடி?

படத்தின் இசையமைப்பாளரும் இயக்குநர் முரளிகிருஷ்ணா தான். திகிலைக் கூட்டும் பின்னணி இசையும், ‘கண்ணுக்கு’, ‘போறவளே’ போன்ற கேட்கிறாப்ல இருக்குப்பா வென்று முணுமுணுக்க வைக்கிற பாடல்களும் மீரா நந்தனோடு சேர்ந்து வரும் இன்னொரு ஆறுதல்.

கொடுமைக்கார டாக்டர் ஆதித்யா மேனன் என்னவோ செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்தால் ச்ச்சே… ச்ச்சே… அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று நடையைக் கட்டுகிறார்.

”இதையெல்லாம் ‘ஊமை விழிகள்’ படத்திலேயே பார்த்தாச்சு, இப்போ போய் பிலிம் காட்டிக்கிட்டு” என்று பார்த்த மாத்திரத்தில் சட்டென்று உதாரணம் சொல்ல வைக்கிற ஓல்ட் -ஏஜ் ஸ்டோரி, விறுவிறுப்புக்கு இடமிருந்தும் அதற்காக மெனக்கிடாத திரைக்கதை என கண்ணுக்கு பக்கத்தில் எக்கச்சக்க குறைகள் படம் முழுக்க சலங்கை கட்டி ஆடுகிறது.

அதுவரை படம் பார்ப்பவர்களை ‘உஷ்… அப்பாடா’ வாக்குகிற இயக்குநர், கிளைமாக்ஸில் இவர் தான் கொலையாளி என்று முடிவுக்கு வருகிற போது யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்டை வைத்து ”அடடே…” வாக்கி அனுப்புகிறார்.

Leave A Reply

Your email address will not be published.