‘திமிரு புடிச்சவன்’ நாயகி ஆனார் நிவேதா பெத்துராஜ்

0

விஜய் ஆண்டனி நடிப்பில் கிருத்திகா உதயநிதி நடிப்பில் தயாராகி வரும் படம் ‘காளி’.

அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என நான்கு நாயகிகள் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.

விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் ‘திமிரு பிடிச்சவன்’ படத்தில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார்.

விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிக்கும் அடுத்த படத்துக்கு திமிரு பிடிச்சவன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேசா இயக்கும் இப்படத்தையும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனமே தயாரிக்கிறது. விஜய் ஆண்டனி இசையமைக்கிறார்.

முதல் முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.

கைவசம் ஜெயம்ரவியின் ‘டிக் டிக் டிக்’ வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ஜகஜால கில்லாடி’ ஆகிய படங்களை வைத்திருக்கிறார்.

Leave A Reply