Banner After Header

இந்தியில் ஒத்த செருப்பு படம் ரிமேக்காக என்ன காரணம்?

0


தமிழில் வெற்றிப்பெற்ற நிறையப் படங்கள் ரிமேக் ஆனாலும் பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்தின் ரிமேக்கில் நவாசுதீன் சித்திக் நடிக்கிறார் என்றால் அதில் வெயிட்டான காரணம் இருக்கும். அந்தக்காரணம் ஒத்த செருப்பு படத்தின் வித்தியாச மேக்கிங் தானாம்.

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தானே இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7.0’. இப்படத்தின் சிறப்பே படத்தில் வேறு எந்தக் கதாபாத்திரமும் கிடையாது, பார்த்திபன் மட்டும் தான் என்பதே. இருப்பினும் படத்தை மிக சுவாரஸ்யமாக இயக்கி நடித்ததோடு, உணர்வுகளை பார்வையாளர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையாக கடத்தி இருந்தார். இது அப்படத்தின் வெற்றிக்குப் பெரிய பலமாக அமைந்தது.

மேலும் படம் பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு பல விருதுகளையும் வென்று வருகிறது. இப்படம் ஹிந்தியில் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், படத்தை பார்த்திபனே இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக இயக்குநர் பார்த்திபன் நவாசுதீன் சித்திக்கோடு எடுத்த புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டு, அதில் OS : 7.0 ரீமேக் தொடர்பான பேச்சு வார்த்தையின் போது என்று” பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.