Banner After Header

ஒளிப்பதிவாளர்கள் சங்கத் தேர்தலில் பி.சி. ஸ்ரீராம் அணியினர் வெற்றி

0

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கான தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் 2019-2021 ஆண்டுக்கான நிர்வாகிகள் பொறுப்புக்கான தேர்தல், தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்க வளாகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நள்ளிரவு 12 மணி அளவில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. தேர்தல் அதிகாரிகளாக கவிஞர் பிறைசூடன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் கே.வி.கன்னியப்பன், முனீர் அகமது, கஸ்தூரி மூர்த்தி கொண்ட நால்வர் குழு தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

பின்னர், பி.சி.ஸ்ரீராம் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தார்கள். அதன்படி இந்த தேர்தலில், தலைவர். பி.சி.ஸ்ரீராம், உப தலைவருக்கு போட்டியிட்ட கார்த்திக் ராஜா, சரவணன் ஆகிய மூவரும் போட்டியின்றி
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

வெற்றி பெற்ற அனைத்து பொறுப்பாளர்களுக்கும் இன்று காலை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை தேர்தல் அதிகாரிகள் வழங்கினார்கள்.நிகழ்ச்சியின் இறுதியில் தேர்தலை சிறப்பாக நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரிகளுக்கும், சங்க உறுப்பினர்களுக்கும் தலைவர். பி.சி.ஸ்ரீராம், பொதுச்செயலாளர் பி.கண்ணன் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.