வெங்கட் பிரபுவின் ‘பார்ட்டி’க்கு ‘U/A’ சர்ட்டிபிகேட்!

Get real time updates directly on you device, subscribe now.

ல மாதங்களாக தயாராகிக் கொண்டிருந்த ‘பார்ட்டி’ திரைப்படம் ஒரு வழியாக ரிலீஸ் தேதியை நெருங்கி விட்டது.

படத்தின் பெயரே ‘பார்ட்டி’ என்பதால் அது மிகப்பெரிய பொழுதுபோக்கை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக குழந்தைகளை யாரும் ‘பார்ட்டி’க்கு அழைக்க மாட்டார்கள். ஆனால் வெங்கட் பிரபு அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார். ஆம், வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்துக்கு சென்சார் சார்பில் ‘யு/ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறது. அனைவரும் பார்த்து மகிழும் ஒரு அழகான பொழுதுபோக்கு விழாவாக இருக்கும்.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா கூறியதாவது, “வெங்கட் பிரபு பெரியவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்று நினைத்து மிகைப்படுத்தி எந்த படத்தையும் எடுத்ததில்லை. அவரது முந்தைய திரைப்படங்களை பார்த்தாலே மிகவும் தெளிவாக தெரியும், அவரின் இலக்கு எப்போதும் அனைத்து தரப்பு மக்களுக்குமான படத்தை தருவது தான்.

Related Posts
1 of 5

நிச்சயமாக, ‘பார்ட்டி’ படத்தின் கதை நடக்கும் பின்னணியால் படம் கிளாமர் விஷயங்களை கொண்டிருக்கும். சிபிஎஃப்சி உறுப்பினர்கள் எங்கள் படத்தின் முதல் பார்வையாளர்களாக இருந்து படத்தை சரியாக மதிப்பிட்டிருப்பது எங்கள் குழுவுக்கே மகிழ்ச்சியளிக்கிறது. ” இது எந்த மாதிரியான கதை என்பது பற்றி இப்போது எதையும் வெளிப்படையாக கூற முடியாது. ஆனால், ஒரு புத்தாண்டு கொண்டாத்தின் போது கதை நடக்கிறது. அதில் நிறைய கதாபாத்திரங்கள், ட்ராமா, ஆக்‌ஷன், காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் பேக்கேஜ் நிச்சயமாக இருக்கும்” என்றார்.

பார்ட்டி படத்தில் சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ஜெய், ஷாம், சிவா, சந்திரன், சம்பத் ராஜ், ரெஜினா கஸாண்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

பிரேம்ஜி அமரனின் இசையமைத்திருக்கிறார். ஃபிஜி தீவுகளை தனது ஒளிப்பதிவால் மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார் ராஜேஷ் யாதவ்.