பெண்குயின்- விமர்சனம்


குழந்தையைத் தொலைத்த ஒரு தாயின் தேடல் என்பதாக ஒன்லைனில் சொல்லிவிடலாம் பெண்குயினின் கதையை. முதல் கணவருக்குப் பிறந்த மகனைத் தேடும் கீர்த்தி சுரேஷுக்கு இரண்டாவது கணவரின் வரிசை வயிற்றில் சுமந்து தாய்ப்பாசத்தை கொட்ட வேண்டிய கதாப்பாத்திரம். நன்றாகவே செய்திருக்கிறார். நமக்குத் தான் அவரின் நடிப்பைக் கொண்டாட முடியவில்லை. காரணம் அவரது கதாப்பாத்திரத்தின் கனமின்மை. ஒரு ஆர்டிஸ்ட் எவ்வளவு நன்றாக நடித்தாலும் அக்கேரக்டர் வீக்-ஆக எழுதப்பட்டிருந்தால் அந்த நடிப்பு விழலுக்கு இறைத்த நீர் தான். பெண்குயினில் அந்தத் தவறு தான் நிகழ்ந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் தவிர குறிப்பிட்டுச் சொல்லும் படியாக யாரும் ஜொலிக்கவில்லை. ஒரு சிறுவனின் பார்வையும் நடிப்பும் மட்டும் சூப்பர்.

Related Posts
1 of 9

சந்தோஷ் நாரயணனின் பின்னணி இசை படத்தை அடர்ந்த மலைப்பகுதியில் இருந்து அதலபாதாளத்திற்கு தள்ளிவிட்டிருக்கிறது. ஒரு இடத்தில் கூட இசை கதையோடும் நம்மோடும் கனெக்ட் ஆகவேயில்லை. ஒளிப்பதிவும் மட்டுமே படத்தின் பேராறுதல். ஒவ்வொரு ஷாட்டையும் கவிதையாக கையாண்டிருக்கிறார் கேமராமேன். எடிட்டிங்கும் ஷார்ப் தான். ஆனால் நிறைய காட்சிகள் மனதில் நிற்கவே இல்லை. பாவம் அதற்கு எடிட்டர் என்ன பண்ணுவார்?

முதல் கணவருக்கும் கீர்த்தி சுரேஷுக்குமான உறவு பிரிவு இரண்டிலுமே அழுத்தமில்லை. மேலும் ஈசியாக கீர்த்தி தப்பிக்கும் சூழல் இருந்தும் அதை அவர் பயன்படுத்தாதது படத்தை இழுக்கும் முயற்சியாகவே படுகிறது. இது படத்தின் பெரிய மைனஸ். ஓட்டி ஓட்டி பார்க்கும் ஓடிடி என்பதால் ரசிகன் தாங்குவான். தியேட்டரில் என்றால் நிச்சயம் ஓட்டம் தான்!
2/5