Banner After Header

பெட்ரோமாக்ஸ்- விமர்சனம்

0

நிலமே எங்கள் உரிமை என்று அசுரத்தனமாக சென்றவாரம் ஒரு மாஸ்டர் பீஸ் படம் பார்த்தோம். இந்தவாரம் வீடே எங்கள் உரிமை என்று ஒரு அட்டகாசமான பேய்ப்படம். அது பெட்ரோமாக்ஸ். இடைவேளை வரை பொறுமை காத்தால் பின்பாதியில் ஓர் இமலாய சிரிப்பு அனுபவம் கிட்டும் என்பதற்கு நாங்கள் சாட்சி என்பது முன் குறிப்பு.

சென்னை மணிமங்கலத்தில் உள்ள பங்களாவை விற்றுவிட்டு மலேசியாவில் செட்டில் ஆக நினைக்கிறார் மலேசிய ரிட்டர்ன் ப்ரேம்.

அந்த வீட்டில் நான்கு பேய்கள் இருக்கின்றன. பேய் இருக்கும் இடத்தில் ஆள் இருக்க முடியுமா என்று பையர்ஸ் எல்லாம் பின்வாங்க..அந்த வீட்டில் நால்வரை தங்க வைக்க ஏற்பாடாகிறது. அந்த நால்வர் முனிஷ்காந்த், காளிவெங்கட், சத்யன், டி.எஸ்.கே. இவர்களை பேய்கள் என்ன செய்தது? பேய்களை இவர்கள் என்ன செய்தார்கள் என்பது தான் கதை.

பேயாக நடித்துள்ள தமன்னா அந்தக்குட்டிப் பெண், மீதுமுள்ள இரண்டு கேரக்டர்கள் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கான பின்கதையும் அந்த வீட்டை அவர்கள் யாருக்கும் விட்டுக்கொடுக்காததிற்கான காரணமும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

முனிஷ்காந்த் அண்ட் கோ நால்வரும் வீட்டிற்குள் சென்று செட்டில் ஆகும் போது தியேட்டரில் கேட்குற சிரிப்புச் சத்தம் படம் முடிந்த பிறகும் கேட்கிறது. இதுதான் இந்தப் பெட்ரோமாக்ஸ் லைட்டின் வீரிய வெளிச்சம். முன்பாதியில் நகரும் கதை கொஞ்சம் சோர்வைத் தந்தது என்பது தான் படத்தின் திருஷ்டிப்பொட்டு.

முனிஷ்காந்த் பயத்தையும் சிரிப்பையும் ஒருசேர முகத்தில் கொண்டுவந்து நான்கடி பாய்கிறார் என்றால் தண்ணிப்போடும் முன்பு ஒருரகம் தண்ணிப்போட்ட பின் ஒருரகம் என நடிப்பை ரகரகமாக பிரித்தெடுத்து எட்டடி பாய்கிறார் காளிவெங்கட். காது கேட்காமலும் இரவில் மட்டும் கண் தெரியாமல் சத்யம் பண்ணும் அலம்பலும் வேறலெவல். மிக முக்கியமாய் பேய்களிடம் மிமிக்ரி செய்து அள்ளு கிளப்பும் டி.எஸ்.கே லொள்ளு சபாவை விட ஏராளமாக சிரிக்க வைக்கிறார்.

தமன்னாவின் பெர்ஃபாமன்ஸும் பெர்பெக்ட். ஜிப்ரானின் பின்னணி இசை சிரிப்புக்கேத்த இனிப்பு. இயக்குநர் ரோகின் வெங்கடேசனுக்கு இந்தப்.பெட்ரோமாக்ஸ் மூலம் ஒரு ஒளிவட்டம் கிடைக்கும். படம் பார்க்குற நமக்கு கொஞ்சம் பிபி சுகர்லாம் கன்ட்ரோல் ஆகும். சின்ன ஏமாற்றங்கள் திரைக்கதையில் இருந்தாலும் கன்பார்மா பெரிதாக ஏமாற்றாது படம். தாராளமா டிக்கெட் எடுக்கலாம்.

3.5/5

Leave A Reply

Your email address will not be published.