பிரபுதேவாவுக்கு 12 வருஷம்! தமன்னாவுக்கு பதினைஞ்சே நிமிஷம்!!

prabhu-deva

மிழ் திரையுலகில் மட்டுமில்லாமல், ஹிந்தி மற்றும் தெலுங்கு சினிமாவிலும் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு பெயர் ‘தேவி’.

இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தேவி என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ சார்பில் பிரபுதேவா மற்றும் டாக்டர் கே. கணேஷ் இணைந்து தயாரித்து இருக்கும் ‘தேவி’ திரைப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க, பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் முன்னணி கதாபாத்திரங்களிலும், நாசர், ஆர் ஜே பாலாஜி மற்றும் சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.

2016 ஆம் ஆண்டின் சிறந்த த்ரில்லர் படமாக தயாராகியிருக்கும் இப்படத்தின் ஆடியோ பங்ஷன் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

Related Posts
1 of 8

தமிழில் நடன இயக்குநராக அறிமுகமாகி பின்னர் நாயகன் ஆகி பின்னர் இயக்குநர் ஆகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக இருக்கும் பிரபுதேவா சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழில் தேவி படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.

“தேவி திரைப்படத்தின் கதையை என்னிடம் விஜய் சார் சொல்ல ஆரம்பித்த 15 வது நிமிஷம் சார் போதும், நான் இந்தப் படத்துல நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். அந்த அளவிற்கு இந்த படத்தின் கதைக்களம் வலுவானதாக இருந்தது. ஒரு அற்புதமான படைப்பாளி விஜய் என்பதை தாண்டி அவரை ஒரு உன்னதமான மனிதராக தான் நான் பார்க்கிறேன்…’ என்றார் தமன்னா.

பின்னர் பேசிய பிரபுதேவா ”12 வருடங்களுக்குப் பிறகு நான் மறுபடியும் தமிழுக்கு வந்திருக்கிறதா எல்லோரும் சொன்னாங்க. ஆனால் இந்த 12 வருடங்களும் நான் புதுசு புதுசா தான் என்னோட படங்கள்ல கத்துக்கிட்டு இருக்கேன். ரொம்ப நாள் கழிச்சி மறுபடியும் என்னோட தமிழுக்கு வர்றதுல ரொம்ப சந்தோஷம்.

ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படங்களாக வழங்குவதே எங்கள் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸின்’ முக்கிய கடமை… அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைய இருப்பது தான் தேவி… அதனை தொடர்ந்து பிரியதர்ஷன் சாரின் ‘சில சமயங்களில்’, ஜெயம் ரவியின் ‘போகன்’ மற்றும் ‘விநோதன்’ ஆகிய சிறந்த படங்கள் அநத வரிசையில் இணைய தயாராகி வருகிறது… ஜெயம் ரவிக்கு அடுத்த ஒரு தனி ஒருவன் திரைப்படமாக போகன் இருக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார் பிரபுதேவா.