விஜய் டிவியை விட்டு வெளியேறுகிறாரா பிரியங்கா? – என்ன நடந்தது?

0

விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலைக்குச் சேர்வது தான் கஷ்டம். சேர்ந்து விட்டால் பல ஆண்டுகளுக்கு அங்கேயே சம்பாதித்து ஓரளவுக்காகவாவது செட்டிலாகி விடலாம். ஆரம்பத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கொடுக்கும் விஜய் டிவி நிர்வாகம் அவர்களுடைய திறமையைப் பார்த்து அடுத்தடுத்த நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு கொடுப்பார்கள்.

அப்படித்தான் திவ்யதர்ஷினி, ரம்யா என பல பெண் தொகுப்பாளினிகள் வருடக்கணக்கில் அங்கேயே கோலோச்சுவது தொடர்ந்து வருகிறது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர்’ இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பிரியங்கா தேஷ்பாண்டே.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த பிரியங்கா அம்மாவின் அரவணைப்போடு வாழ்க்கையில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக களமிறங்கியதன் மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அவருடைய முதல் திருமணம் சில மாதங்களிலேயே முறிந்தாலும், இரண்டாவதாக பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு இன்றுவரை வாழ்க்கையை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தொடர்ந்து வருகிறார்.

இப்படி ஸ்மூத்தாக போய்க்கொண்டிருக்கும் பிரியங்கா விஜய் டிவியிலிருந்து விலகி விட்டதாக கடந்த சில தினங்களாகவே பரபரப்பாகப் பேசப்படுகிறது.

இப்படித்தான் திவ்யதர்ஷினியும் விஜய் டிவியிலிருந்து சில மாதங்கள் விலகியிருந்தார். அதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. இந்த நிலையில் பிரியங்காவும் விஜய் டிவியிலிருந்து வெளியேறியிருப்பது சின்னத்திரை ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆனால் பிரியங்கா நிரந்தரமாக விஜய் டிவியை விட்டு வெளியேறவில்லை. தற்போது அவர் தாய்மை அடைந்திருப்பதால் அதற்காக சில மாதங்கள் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இருந்து வெளியேறியிருப்பதாக சொல்கிறார்கள். என்றாலும் இது குறித்து பிரியங்கா அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

Leave A Reply

Your email address will not be published.