இளையராஜா இசைக்கு ஈடு எதுவுமில்லை – தயாரிப்பாளர் புகழாரம்

ராகதேவன் இளையராஜா இசை அமைப்பில் சைக்கோ படம் வெளியாக இருக்கிறது. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர்
Double Meaning Productions அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது….

Related Posts
1 of 10

“பாடலுக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு, என்னை மெய்மறக்க செய்திருக்கிறது. இசைஞானி இளையராஜாவின் இசைக்கு ஈடுஇணை ஏதுமில்லை. அவரது இசைக்கு காலம் ஒரு பொருட்டே அல்ல. எத்தனை வருடங்கள் ஆனாலும் எக்காலாத்திலும் அவரே இசையின் ராஜா. “சைக்கோ” படத்தின் பாடல்கள் என்னை உருக்கி விட்டது. சிம்பொனி இசைத்துணுக்குகள் கேட்டு மயங்கிப்போனேன் அதிலும் அதில் வரும் வயலின் இசை என்னை அடிமையாக்கிவிட்டது.

சித் ஶ்ரீராமின் குரல் இப்பாடலுக்கு பெரும்பலம் தந்திருக்கிறது. மேலும் இப்பாடலுக்கு வரிகள் தந்திருக்கும் கபிலன் வைரமுத்து வெகு திறமையானவர் என்பதை நிரூபித்திருக்கிறார். பாடலில் வரும் “நீ தெய்வம் தேடும் சிலையோ” எனும் ஒரு வரி போதும் அவரது மேதமைக்கு சான்று கூற. இப்பாடல் விஷுவலாக இன்னும் பல படிகள் மேலே இருக்கும். உணர்வின் உன்னத நிலைக்கு ரசிகர்களை கொண்டு செல்லும் என்பது உறுதி” என்றார்.