‘புலி’ ரிலீசாகுமா? : நாளை காலை 11 மணிக்குள் தெரியும்

puli1

ர வர பெரிய ஹீரோக்களின் படங்களின் ரிலீஸ் ஆவது என்பது அமைச்சர்களின் பதவி போல் ஆகி விட்டது.

விடிந்தால் தான் தெரிகிறது இன்று படம் ரிலீசாகிறதா? இல்லையா? என்று. அந்தளவுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை வந்து சூழ்ந்து விடுகிறது.

விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டப் படமாக தயாராகியிருக்கும் ‘புலி’ நாளை ரிலீசுக்கு தயார் நிலையில் இருந்தது.

சில தினங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங்  ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குள் ஒரு வாரத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன.

அதேபோல சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தியேட்டர்களிலும் ரசிகர்களுக்கான அதிகாலை ஸ்பெஷல் காட்சி முதல் நாளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான டிக்கெட்டுகளும் கூட விற்றுத் தீர்ந்து விட்டன.

இந்த மகிழ்ச்சியான சூழலில் தான் ‘இன்கம்டாக்ஸ்’ அதிகாரிகள் இன்று காலை முதல் திடீர் ரெய்டு வேலையை ஆரம்பித்தார்கள். விஜய் வீடு, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீடு, இயக்குநர் சிம்புதேவன் வீடு என புலி படக்குழுவின் முக்கிய தலைகள் யாரையும் விட்டு வைக்கவில்லை.

Related Posts
1 of 109
சென்னை ஏ.ஜி.எஸ் தியேட்டரில் காலை ஸ்பெஷல் காட்சி ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பு

இன்று காலையில் ஆரம்பித்த ரெய்டு இரவாகியும் முடியாததால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படத்தை திரையிடுவதற்கான அனுமதி தியேட்டர்காரர்களுக்கு வரவில்லையாம்.

இதனால் நாளை காலை ஸ்பெஷல் காட்சிக்கு டிக்கெட் எடுத்த ரசிகர்களுக்கு சம்பந்தப்பட்ட தியேட்டர்களில் இருந்தே போன் செய்து டிக்கெட்டுக்கான பணத்தை திருப்பி வாங்கிக் கொள்ளும் படி அழைப்பு வந்திருக்கிறது.

இதனால் நாளை ‘புலி’ ரிலீசாகுமா? ஆகாதா? என்கிற சந்தேகம் கிளம்பிய நிலையில் ”இல்லை நாளை கண்டிப்பாக படம் ரிலீசாகும்” என்கிற பாஸிட்டீவ்வான தகவலும் ‘புலி’ தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

நாளை காலை ஸ்பெஷல் காட்சி மட்டுமே ரத்தாகியிருக்கிறது. ரெகுலர் காட்சியான 11 மணி காட்சியிலிருந்து படம் ஓப்பன் ஆகி விடும் என்று உறுதியாக தகவலை தருகிறார்கள்.

மொத்தத்தில் ‘புலி’ நாளை சீறிப்பாயுமா? இல்லையா என்பதற்கான பதில் காலை 11 மணிக்குள் தெரிந்து விடும்!

நம்பிக்கையுடன் காத்திருங்கள் விஜய் ரசிகர்களே… கண்டிப்பாக நல்ல செய்தி வரும்!