மூன்றே நாளில் எமனின் வசூல் 8 கோடி! : விஜய் ஆண்டனிக்கு ரஜினி பாராட்டு

0

 

Untitled-1

ரு படம் ஹிட்டானவுடன் அதே டைப் கதைகளோடு அந்தப்படத்தின் ஹீரோவை நோக்கி இயக்குநர்கள் படையெடுப்பது தமிழ்சினிமாவில் வாடிக்கையான ஒன்று.

ஆனால் அந்த டைப் கதைகளுக்கெல்லாம் ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டு முந்தைய படத்தின் சாயல் கொஞ்சமும் இல்லாத கதையை தனது அடுத்த படத்துக்கு டிக் செய்வது தான் விஜய் ஆண்டனியின் பழக்கம்.

அவரது தொடர் வெற்றிக்கும் இந்த நல்ல பழக்கம் தான் காரணம் என்று நம்புகிறது கோலிவுட் வட்டாரம்.

அப்படித்தான் சைத்தான் படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் சென்ற வாரம் ரிலீசான எமன் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

படம் ரிலீசான மூன்றே நாட்களில் சுமார் 8 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூல் செய்திருக்கிறதாம்.

அதோடு எமன் அரசியல் பின்னணியைக் கொண்ட படமாயிற்றே? அதை பார்த்து ரசிக்க வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

உடனே அவருக்கு பிரத்யேக காட்சி போட்டுக் காண்பிக்கப்பட்டிருக்கிறது.

முழுப்படத்தையும் பார்த்து ரசித்த ரஜினிகாந்த் அடுத்த நொடி ஹீரொ விஜய் ஆண்டனிக்கு போனைப் போட்டு ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்க… என்று மனதாரப் பாராட்டினாராம்.

வழக்கம் போல இந்த வெற்றிக்கும், பாராட்டுக்கும் தனது தலையில் இடம் கொடுக்காமல் அடுத்த படத்துக்கான வேலைகளில் மும்முரமாகி இறங்கி விட்டார் விஜய் ஆண்டனி.

Leave A Reply