ரஜினியின் அடுத்த படம் – அட்லீக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

0

ஜினியை வைத்து ஒரு படத்தையாவது இயக்கி விட வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் டைரக்டர் லிஸ்ட்டில் பா. ரஞ்சித்தைத் தொடர்ந்து  புதிதாக சேர்ந்திருக்கிறார் டைரக்டர் அட்லீ.

‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அட்லீயின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அது ‘மெர்சல் 2’ வாக இருந்தால் ரொம்ப சந்தோஷம் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்தமுறை அட்லீ இணைவது விஜய்யுடன் இல்லை. நடிகர் ரஜினியுடன் இணையப் போகிறாராம். அட்லீ – ரஜினி காம்பினேஷன் என்பதை கேட்பதற்கே வியப்பாகவும், நம்ப முடியாத விஷயமாகவும் இருந்தாலும் உண்மை அதுதானாம்.

சமீபகாலமாக இளம் இயக்குநர்கள் பக்கம் தனது பார்வையை திருப்பியிருக்கும் ரஜினி பா.ரஞ்சித்தைத் தொடர்ந்து அடுத்த அட்லீ இயக்கத்தில் நடிக்கப் போவது உறுதியாகியிருக்கிறது.

எந்த ‘மெர்சல்’ படத்தால் ரிலீஸ் நேரத்தில் பல சங்கடங்களை அனுபவித்தாரோ? அதே தயாரிப்பாளர் தான் ரிலீசுக்குப் பின்னர் மெர்சல் கொடுத்த பல மடங்கு வசூலில் திருப்தியடைந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் இந்தப் படத்தை தயாரிக்க முன் வந்திருக்கிறார்.

அடுத்த கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. கூடுதல் தகவல்களை மிக விரைவிலேயே எதிர்பார்க்கலாம்.

Leave A Reply