ஜோக்கர் பட இயக்குநர் ராஜூமுருகனுடன் ஜீவா இணையும் ‘ஜிப்ஸி’

0

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ‘ஜிப்ஸி’ என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ராஜூமுருகன் பாலாவின் ‘வர்மா’ படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்தியாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம் கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.

குக்கூ, ஜோக்கர் படங்களில் சமூக வாழ்வியலை பிரதிபலித்த ராஜூ முருகன் ஜிப்ஸி படத்தை சமூக வாழ்வியலோடு கூடிய கமர்ஷியல் படமாகத் தர இருக்கிறார். படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளார் இயக்குனர் ராஜூமுருகன்.

Leave A Reply