மணிரத்னம் படத்திலிருந்து வெளியேறிய பஹத் பாசில் – என்ன காரணம் தெரியுமா?

0

‘காற்று வெளியிடை’ படத்தைத் தொடர்ந்து மல்ட்டி ஸ்டார் படம் ஒன்றை மணிரத்னம் இயக்கப் போகிறார் என்று கடந்த சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்தது.

அரசல் புரசலாக வந்த அந்தச் செய்தியை சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார் மணிரத்னம்.

அதன்படி ‘செக்கச் சிவந்த வானம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஹதாரி ஆகியோர் நடிக்கிறார்கள். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

இந்த மாதம் இறுதியில் ஷூட்டிங் தொடங்க இருக்கும் நிலையில், முன்னதாக இந்தப் படத்தில் பகத் பாசிலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

மணிரத்னம் படம் என்றாலே எந்த மறுப்பும் சொல்லாமல் தலையாட்டும் ஹீரோக்களுக்கு மத்தியில் பகத் பாசில் மட்டும் ஏன் மறுப்பு சொன்னார் என்பது தான் பலருடைய கேள்வியாக இருந்தது.

அதற்கு தற்போது பதில் கிடைத்திருக்கிறது. ஆமாம், மணிரத்னம் கேட்ட தேதிகளை ஏற்கனவே வேறு படங்களுக்கு கொடுத்து விட்டதால் பகத் பாசிலால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதுதான் உண்மையான காரணமாம். மற்றபடி சம்பளம் உள்ளிட்ட எந்த விஷயமும் காரணம் இல்லை என்கிறார்கள்.

பஹத் பாசிலின் முதல் அறிமுக தமிழ்ப் படமான ‘வேலைக்காரன்’ படத்தில் அவருடைய நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply