‘சொடக்கு’ பாடலை எதிர்த்த அதிமுக நிர்வாகிக்கு பதிலடி கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!

0

சூர்யா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வர இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்.’

இப்படத்தில் இடம்பெறும் ‘சொடக்கு’ பாடலில் வரும் “அதிகார திமிர, பணக்கார பவர வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது” என்ற வரி குறிப்பிட்ட ஒரு கட்சியை (அதிமுக) கிண்டல் செய்வது போல் உள்ளது என்று அதற்கு கண்டனம் தெரிவித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சதீஷ்குமார் நேற்று புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் விபரம் நேற்று சமூகவலைத்தளங்களில் வைரலானதோடு மெர்சல் படத்தைப் போலவே தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கும் ஓசியில் விளம்பரம் கிடைக்க ஆரம்பித்து விட்டது.

அதனால் கண்டிப்பாக இந்தப்படம் ஹிட்டு தான். ஓசியில் விளம்பரம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு நன்றி என்றெல்லாம் சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா ரசிகர்கள், ஆர்வலர்கள் என பெரும்பான்மையோர் அந்தப் புகாரை கிண்டல், கேலி செய்தார்கள்.

இதற்கிடையே இந்த புகார் விபரத்தைப் பார்த்த நடிகரும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருப்பவருமான ஆர்.ஜே. பாலாஜி “படத்தை தாண்டி நாட்டில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. தற்போது பேருந்துகள் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு போய் முதலில் உதவுங்கள்” என காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

Leave A Reply