Banner After Header

‘ரம்’ நாயகியின் பீர் சாகசம் ஸாரி… கார் சாகசம்!

0

rum

லன் குமாரசாமி இயக்கிய ‘சூது கவ்வும்’ படத்தில் கற்பனை கதாபாத்திரமாக தோன்றி, தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கிறங்கடித்தவர் பெங்களூரு தக்காளி ‘சஞ்சிதா ஷெட்டி’.

இவர் தற்போது அறிமுக இயக்குநர் ‘சாய்’ இயக்கும் ‘ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘பீட்சா – 2’ படத்திற்கு பிறகு, மூன்று வருடம் கழித்து இவர் நடிக்கும் தமிழ்ப்படம் இதுதான். அனிருத் இசையமைப்பில் ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் தயாரித்துள்ள இப்படம் ஒரு த்ரில்லர் மூவி.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் நடைபெற்று வருகிறது. படத்தின் டைட்டில் ரம் என்பதால் ஏதாவது பீர் சாகசம் செய்திருப்பார் என்று பார்த்தால் படத்தில் கார் சாகசம் ஒன்றை செய்து படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் நாயகி சஞ்சிதா ஷெட்டி.

“இப்படத்தில் காரில் துரத்திக் கொண்டு போகும் காட்சி ஒன்று உண்டு. ஆனால் அந்த காரை நான் தான் ஓட்ட வேண்டும் என்று இயக்குநர் சொன்னவுடன் மனதிற்குள் ஒரு பயம் கலந்த பதற்றம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் எனது சக நடிகர்களாகிய ரிஷிகேஷ், விவேக் மற்றும் அம்ஜத் ஆகியோரும் காரில் ஏற, பயத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்! காரை விட்டு இறங்கியதும் இயக்குநர் என்னிடம் கேட்ட கேள்வி என் பதற்றத்தை எல்லாம் சிரிப்பாக மாற்றி விட்டது”

அப்படி என்ன கேள்வி அது? “ஏன்மா, கார் ஒட்ட தெரியாது என்று நாங்கள் உள்ளே ஏறும் முன்னே சொல்லியிருக்கலாமே!! இது தான் அந்த கேள்வி” என்று புன்னகைக்கிறார் சஞ்சிதா ஷெட்டி.

இத்திரைப்படம் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

எதுவாயிருந்தாலும் முன்னாடியே சொல்லிடும்மா…

Leave A Reply

Your email address will not be published.