சாஹோ – விமர்சனம் #Sahoo

Get real time updates directly on you device, subscribe now.

RATING 2.5/5

‘பாகுபலி’யின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு வரும் படமென்பதால் ரிலீசுக்கு முன்பே ”ஆஹோ ஓஹோ” என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் தான் ”சாஹோ”.

காட்சிகள் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இருந்தாலும், படத்தின் கதை எளிய ரசிகனும் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழப்பமான திரைக்கதை அமைப்புடன் இருந்தது தான் பிரம்மாண்டத்தின் ஓட்டை.

ராய் என்கிற பெரிய கேங்க்ஸ்டர் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். அவரை காலி செய்து விட்டு அந்த இடத்தை தாங்கள் கைப்பற்ற திட்டமிட்டு ராயை கொலை செய்கிறது இன்னொரு கேங்ஸ்டர்.

இதனால் கொதித்தெழும் பிரபாஸ் ஒரு போலீஸ் அதிகாரி போல நடித்து எப்படி அந்த எதிர் கேங்ஸ்டர் கும்பலை பழி வாங்குகிறார்? என்பதே கிளைமாக்ஸ்.

‘பாகுபலி’யில் ஆஜானுபாகுவான உடலமைப்புடன் ஆணழகனாக வந்த பிரபாஸ் இதில் ”எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” என்கிற ரேஞ்சிலேயே நம் முன்னே நிற்கிறார்.

கிளைமாக்ஸில் வரும் சேஸிங் காட்சிகள், ஸ்ரத்தா கபூருடனான ரொமான்ஸ் காட்சிகளில் மட்டுமே நம்மை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். மற்ற காட்சிகளில் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. பிரபாஸூக்கு ஏற்ற ஜோடியாக வருகிறார் ஸ்ரத்தா கபூர். பாடல் காட்சிகளில் கலர்புல்லாக மிண்ணுகிறார்.

Related Posts
1 of 43

ஒரு பிரம்மாண்டப் படத்தில் நடித்திருக்கிறார் என்கிற பெருமையைத் தாண்டி படத்தில் அருண் விஜய் கேரக்டருக்கு பெரிதாக வேலையில்லை.

மலையைக் குடைந்து சிறிய சைஸ் பாறாங்கற்கலாக ஆக்கியது போல படத்தில் விதவிதமான தோற்றங்களில் எக்கச்சக்க நடிகர்கள் வருகிறார்கள்.

கோடிகளை கொட்டி எடுக்கப்பட்ட படமென்பதில் எந்த சந்தேகமும் வந்து விடக்கூடாது என்பது உத்தரவாதம் கொடுத்திருக்கிறது மதியின் அசத்தலான ஒளிப்பதிவு. பிரம்மாண்டமான கட்டிடங்கள், ஏரியல் வியூவ்ஸ், சேஸிங் காட்சிகள் என படத்தில் ஆறுதல் தருவது இது மட்டுமே!

சங்கர் எசன் லாய் இசையில் பாடல்கள், ஜிப்ரானின் இசையில் பின்னணி இசை இரண்டுமே படத்தின் ஓட்டத்துக்கு கொஞ்சமும் கைகொடுக்கவில்லை.

பிரம்மாண்டப்படம் என்றாலே சரித்திரப் படங்களும், கேங்க்ஸ்டர் படங்களும் தானா? இந்த இரண்டு ஜானர்களை தாண்டி இந்திய சினிமா யோசிக்க வேண்டுமென்பதையே இந்தப்படம் சொல்லித் தந்திருக்கும் பாடம்.

சாஹோ – நல்ல கதை மட்டும் இருந்திருந்தால் ‘ஓஹோ’ வாகியிருக்கும்!