மாமனார் நாகர்ஜூனாவுடன் சமந்தா வாட்ஸ் அப் சாட்டிங்! – செமையா வைரல் ஆயிடுச்சு!

0

samantha1

நாகர்ஜூனாவின் மகன்களில் ஒருவரான நாகசைதன்யாவும், சமந்தாவும் பல மாதங்களாக காதலித்து வந்தனர்.

ஏற்கனவே சித்தார்த் உடனான காதல் புட்டுக் கொண்டதால் இதுவும் அப்படியே ஆகி விடும் என்று தான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இருவருடைய காதலும் வீட்டுக்கு தெரிந்தவுடன் நாகர்ஜூனா குடும்பத்தினர் மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

இதையடுத்து இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில்

நாகசைதன்யாவின் அப்பாவும், சமந்தாவின் வருங்கால மாமனாருமான நாகர்ஜுனாவுடன் சமந்தா உரையாடிய வாட்ஸ் அப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் நாகசைதன்யா தயாரித்து நடித்து வரும் ‘ராரண்டோய் வேதுகா சூடாம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

அதைப் பார்த்து சமந்தா தனது மாமனாரான நாகர்ஜுனாவிடம் வாட்ஸ் ஆப்பில் பேசியுள்ளார். அந்த பெர்சனல் உரையாடலை தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நாகர்ஜுனா .

இதுவரை ‘ராரண்டோய் வேதுகா சூடாம்’ டிரைலரை சுமார் 2 கோடி பேர் பார்வையிட்டுள்ளனர். எப்படி ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனதோ? மாமனாருடன் சமந்தா பேசிய வாட்ஸ் அப் உரையாடலும் வைரலாகி விட்டது.

Leave A Reply