கண்டிஷன்களைப் போட்டு கதற விடும் சமந்தா! : கொந்தளிப்பில் தயாரிப்பாளர்கள்

samantha

ந்த புள்ளையா ரொம்ப சமத்தா இருக்கும் என்று பெயரெடுத்துக் கொண்டிருந்த சமந்தா மீது சமீபகாலமாக புகார்கள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

கத்தியின் வெற்றிக்குப் பிறகு தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா தமிழில் விஜய்யுடன் தெறி, சூர்யாவுடன் 24 உட்பட சில படங்களில் நடித்து வருகிறார்.

மாஸ் ஹீரோக்களின் படங்கள் என்பதால் அவருடைய சம்பளமும் சுமார் ஒண்ணேகால் கோடிக்கு தரப்படுகிறது.

Related Posts
1 of 40

அப்படியிருந்தும் அவர் படப்பிடிப்புக்கு வந்தாலே தயாரிப்பாளர்களுக்கு கூடுதலாக 50 லட்சம் வரை மேற் செலவுகள் ஆகிறதாம்.

ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தால் தங்குவதற்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் தான் வேண்டும். பர்ஸ்ட் கிளாஸ் ப்ளைட் டிக்கெட் தான் வேண்டும். கூடவே வரும் ஃபேமிலி மெம்பர்களுக்கும், தோழிகளுக்கும் தனித்தனி தங்கும் அறைகள் வேண்டும், அவர்களுக்கும் பர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் தான் வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கதறுகிற அளவுக்கு கண்டிஷன்களைப் போடுகிறாராம்.

இதனால் சமந்தாவை கமிட் செய்ய ஹீரோக்களும், இயக்குநர்களும் ஆசைப்பட்டாலும் பணம் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் ரொம்பவே யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஏம்ம்மா… நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சு..?