Banner After Header

சர்கார் – விமர்சனம் #Sarkar

0

RATING – 3/5

நடித்தவர்கள் – விஜய், கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ கருப்பையா, யோகிபாபு மற்றும் பலர்

ஒளிப்பதிவு – கிரீஷ் கங்காதரன்

இசை – ஏ.ஆர். ரஹ்மான்

இயக்கம் – ஏ.ஆர்.முருகதாஸ்

வகை – ஆக்‌ஷன், த்ரில்லர்

சென்சார் பரிந்துரை – U/A

கால அளவு – 2 மணி நேரம் 43 நிமிடங்கள்

தை திருட்டு சர்ச்சையில் சிக்கி பரபரப்பை கிளப்பி சமரசம் ஆகி ரிலீசாகியிருக்கும் படம் தான் விஜய் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இந்த ‘சர்கார்’.

‘கத்தி’, ‘மெர்சல்’ என சமீபத்திய படங்களில் மக்கள் பிரச்சனைகளைப் பேசிய விஜய் இதில் முழுக்க முழுக்க அரசியல் பேசுகிறார். ”உங்க தலைவரை உங்ககிட்ட இருந்து தேர்ந்தெடுங்க, அவங்க சகாயம் மாதிரியான நேர்மையான அதிகாரிங்களா இருக்கணும்” என்கிறது படம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டுமே கிழியில் இருந்து தப்பவில்லை.

அமெரிக்காவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் சி ஈ ஓ வாக வேலை பார்க்கும் விஜய் சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவருடைய ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்து போகிறார்.

ஒரு ஓட்டு தானே? என்று திரும்பிச் சென்று விடாமல் தன் ஓட்டுக்காக சட்டப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். தன்னைப் போலவே கள்ள ஓட்டுகளால் தங்கள் வாக்கையும் இழந்த மக்களையும் போராடத் தூண்டுகிறார்.

வலுவான அரசியல் கட்சிக்கு எதிராக நடத்தும் சட்டப்போராட்டத்தில் அவருக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

டான்ஸ், ஸ்டண்ட் இரண்டிலும் ஸ்டைலாகவும், மிரட்டலாகவும் கலக்கியிருக்கும் விஜய் சீரியசான போராடும் இளைஞர் கேரக்டரில் கொஞ்சம் சொதப்பித் தான் வைத்திருக்கிறார். அவர் எதிர்க்கும் அரசியல் வாதிகள் அவர் முன்னால் பெரிய ஆட்கள் இல்லை என்பதற்காக கைகளை மேலே தூக்கிக்கொண்டு நடக்கும் போதும், சிரிக்கும் போதும் பிரச்சனைகளை சீரியசாக அணுகியிருக்கலாமோ? என்று சொல்லத் தோன்றுகிறது. இருந்தாலும் தனது வழக்கமான நடிப்பில் ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கிறார்.

நாயகியாக வரும் கீர்த்தி சுரேஷ் பாடல் காட்சியில் டூயட் பாடுகிறார். சில சீன்களில் விஜய்யோடு கூடவே ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி வருகிறார். அதைத்தாண்டி ‘ஆஹா’, ‘பிரமாதம்’ என்று பாராட்டுகிற அளவுக்கு அவருடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லை.

சத்யம் தியேட்டர் ஆடியன்சுக்கு பரங்கி மலை ஜோதியில என்ன வேலை? போன்ற சில பஞ்ச் வசனங்களால் தனக்கே உரிய பாணியில் டைமிங் காமெடி செய்து சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. அவருடைய காட்சிகளை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருந்தால் தியேட்டர்கள் களை கட்டியிருக்கும்.

அசால்ட்டான வில்லன்களாக ராதாரவி, பழ கருப்பையா இருவரும் தங்களது தேர்ந்த நடிப்பை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பழ கருப்பையாவின் மகளாகவும், வில்லியாகவும் வரும் வரலட்சுமி சண்டக்கோழியில் காட்டிய நடிப்பை எந்த மாற்றமும் இல்லாமல் கொடுத்திருக்கிறார்.

ஜல்லிக்கட்டு, நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், கந்து வட்டி தற்கொலை, கண்டெய்னரில் சிக்கிய 500 கோடி என சமீபத்திய தமிழ்நாட்டு நிகழ்வுகளை அங்கங்கே நினைவுப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதற்கு அவரும், ஜெயமோகனும் சேர்ந்து எழுதிய

”இங்க பிரச்சனைக்கு தீர்வு தேவையில்லை சார், இன்னொரு பிரச்சனை தான் தேவை.”

”எதிர்க்க ஆளே இல்லேங்கிற எண்ணம் தான் ஜனநாயகத்துக்கு ஆபத்து.”

”இந்த கூட்டமெல்லாம் வேணாம்பா. வீட்லயே உட்காந்துக்கிட்டு ட்விட்டர்லயே முடிச்சிக்கலாம்ல.”

”அவன் கார்ப்பரேட் கிரிமினல், நான் கருவிலே கிரிமினல்.”

”ஒரு ஆள் கூட்டமா மாறுவதும், ஒரு கூட்டம் ஒத்தை ஆளா மாறுவதும் இப்பல்லாம் ஒரேநாள்ல சர்வசாதாரணமா நடக்கும்”

போன்ற வசனங்கள் வீரியம் சேர்த்திருக்கின்றன.

கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவில் நைட் எபெக்ட்ஸ் காட்சிகள் அபாரம். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை அதிர வைத்தாலும் சம்பந்தமே இல்லாமல் வரும் பாடல்கள் ரசிப்பு பெரும் தடையாக இருக்கின்றன.

’49 ஓ’ என்ற ஒரு சட்டம் இருப்பது போல ’49 பி’ என்றொரு சட்டம் இருக்கிறது. அது கள்ள ஓட்டுக்களுக்கு எதிராக ஜனநாயகத்தைக் காக்க பொதுமக்களுக்கு இருக்கும் ஆயுதம் என்கிற இதுவரை அதிகம் தெரிந்திராத சட்டத்தை மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தவிர்க்க வேண்டிய சிகரெட் பிடிக்கும் காட்சிகளை மெனக்கிட்டு வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களிடம் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் கமர்சியல் சமாச்சாரங்களை கால்வாசியாவது சேர்த்திருந்தால் விஜய்யின் ‘சர்கார்’ இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்!

Leave A Reply

Your email address will not be published.