மிரட்டல், உருட்டல் : தமிழ்த் திரையுலகிலும் சசிகலா கும்பல் செய்த அடாவடிகள்!!

Get real time updates directly on you device, subscribe now.

சிகலாவினாலும், அவரது மன்னார்குடி மாஃபியா கும்பலினாலும், ஜெயா டிவியினாலும் தாங்கள் பட்டக் கஷ்டங்களை மனம் குமுறி இப்போது வெளிப்படையாக சொல்ல தொடங்கியுள்ளனர் தமிழ் சினிமாத் துறையினர்.

ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை, அவருக்கே தெரியாமல் அவரது பெயரை சொல்லி சசிகலாவும் அவர் கும்பலும் அடித்த கொட்டம் வெளிவர ஆரம்பித்துள்ளது.

சிவாஜி கணேசன், அவர் மகன்கள் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோரை மிரட்டி, ராம்குமார் மகளை சுதாகரனுக்கு திருமணம் செய்து வைத்தனர். உயிர் பயத்தில் இறுதியில் ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டனர். அந்த திருமணத்தில் இசை அமைக்க ஏ.ஆர்.ரகுமான் மறுத்த போதும் மிரட்டி அழைக்கப்பட்டார்.

சொத்துக்களை மிரட்டி பெறுவதில் சசி கும்பலுக்கு நிகர் யாரும் இல்லை. இசை அமைப்பாளர் கங்கை அமரனின் பையனூர் பங்களாவை மிரட்டி எழுதி வாங்கினார். இத்தனை நாட்களும், தன்னால் வெளியே சொல்ல முடியவில்லை. இப்போது முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் துணிச்சலான முடிவுகளால் தாமும், தைரியமாய் வெளியே சொல்லுவதாக கூறியுள்ளார். அதே போல தான் சென்னையில் உள்ள பீனீக்ஸ் மால், ஜாஸ் சினிமாஸ் அபகரிக்கப்பட்ட கதைகளும். ஏற்கனவே பாலு ஜுவல்லர்ஸ் உரிமையாளரை மிரட்டி இறுதியில் அவர் தற்கொலை செய்து கொண்டதை இந்த உலகமே அறியும்.

அடுத்து- ஜெயா டிவி மூலம் திரைத்துறையினரை மிரட்டுவது. சமீபத்தில் வந்த இயக்குனர் திரு. விசு அவர்களின் வீடியோ பதிவை பார்த்திருப்பீர்கள். எவ்வளவாய் மிரட்டப்பட்டார் என்று.
புதுப்படங்கள் வரும் போது அந்த படத்தின் ஒளிபரப்பு உரிமை ஜெயா டிவிக்கே தர வேண்டும் என்று மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்கள் பலர். ஆஸ்கர் ரவிச்சந்திரன், சூப்பர் குட் பிலிம்ஸ், தாணு, எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ், ராஜலக்ஷ்மி பிலிம்ஸ் என்று பலர் தங்கள் படங்களை கொடுக்க வேண்டும் என்று மிரட்டப்பட்டனர். அதுவும் அடி மாட்டு விலைக்கு.

விஸ்வரூபம் படத்தின் போது, கமலஹாசன் எப்படி மிரட்டப்பட்டார் என்று அனைவரும் அறிந்ததே. நாட்டை விட்டே போகிறேன் என்று அவர் சொல்லும் அளவுக்கு கொடுமை செய்தனர். 2006 சட்டசபை தேர்தலில் 200 கோடிக்கு கட்சியில் சேர கமலிடம் விலை பேசி மிரட்டிய கும்பல் இது. அதே தேர்தலில் ஆச்சி மனோரமாவும் மிரட்டப்பட்டார். அதிலிருந்து அவரது உடல்நிலை மோசமடைந்தது.

2015 சென்னை வெள்ளத்தின் போது கமலை அடியாட்களை வைத்து மிரட்டியதும், அவர் வீடு அமைந்திருக்கும் பகுதிக்கு மின்சாரத்தையும், தண்ணீரையும் துண்டித்த கும்பல்- சசியின் மாஃபியா கும்பல். தலைவா படம் ரிலீஸின் போது, விஜய்க்கு இவர்கள் கொடுக்காத குடைச்சலா?

இன்னும் இவர்களால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் ஏராளம். அதனால் தான் இப்போது நடிகர் கமல்ஹாசன், அரவிந்தசாமி, எஸ்.வி. சேகர், இளைய தளபதி விஜய், ஆர்யா, பாக்யராஜ், பாரதிராஜா, விசு, சித்தார்த், லாரன்ஸ், விஷால் போன்றோரும் நடிகைகளில் கவுதமி, லதா, குஷ்பூ, விந்தியா, ஸ்ரீபிரியா, ரோகினி, சுகாசினி, வெண்ணிற ஆடை நிர்மலா, அம்பிகா, ராதா, சிம்ரன் மற்றும் டி. இமான், ஜேம்ஸ் வசந்த், அமீர், சமுத்திரக்கனி, ரவிச்சந்திர அஸ்வின், சின்மயி, பெப்சி உமா, வீணை காயத்ரி போன்ற பிரபலங்களும் சசி குடும்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இத்தனை நாட்களும் வெளிய சொல்ல முடியாமல் தவித்து கொண்டிருந்தவர்கள் இப்போது ஓபிஎஸ் அவர்களின் துணிச்சலான சசி எதிர்ப்பு செயல்களால் நேரிடையாகவும், வெளிப்படையாகவும் தங்களது பாதிப்புகளை சொல்ல ஆரம்பித்துள்ளனர்.