ஹலோ தியேட்டர் ஓனர்ஸ்… : முதல்ல இந்த 5 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க..!

Get real time updates directly on you device, subscribe now.

tn-theatre1

திரைப்படங்களுக்கு ஜி.எஸ்.டி மற்றும் தமிழக அரசின் உள்ளூர் வரியை எதிர்த்து தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் நான்கு நாட்கள் தியேட்டர்களை மூடி போராட்டம் நடத்தினார்கள்.

உண்மையில் அரசு வரியை உயர்த்தினால் அதை தியேட்டருக்கு படம் பார்க்க வரும் ரசிகர்களிடமிருந்து தான் பிடுங்குவார்கள்.

உண்மை இப்படியிருக்கும் போது ஏதோ தங்கள் பாக்கெட்டிலிருந்து அரசுகளுக்கு வரிகளைக் கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது போல கதறினார்கள்.

மூன்றாம் நாள் முடிவில் தமிழக அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டதையடுத்து போராட்டத்தை வாபஸ் வாங்கி விட்டு நேற்று முதல் மத்திய அரசு போட்ட ஜி.எஸ்.டி வரியை மக்கள் மீது சுமத்தி விட்டு தியேட்டர்களை திறந்து வழக்கம் போல வசூலைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

இப்படி தியேட்டர் உரிமையாளர்கள் செய்வது தான் மிகப்பெரிய அநியாயம் என்று குற்றம் சாட்டியிருக்கிறது சட்டப் பஞ்சாயத்து இயக்கம். மேலும் நியாயமாக மக்கள் தான் தியேட்டர் உரிமையாளர்களை எதிர்த்து போராட்டம் செய்ய வேண்டும் என்றும் கண்டித்துள்ள அந்த இயக்கம் தியேட்டர் உரிமையாளர்களை நோக்கி 5 சாட்டையடிக் கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. மனசாட்சியின்படி பதில் தருவதோடு அதன்படி நடந்து கொள்ளவும் முடியுமா? என்றும் அந்த இயக்கம் கேட்டிருக்கிறது.

இதோ அந்த 5 கேள்விகள் :

Related Posts
1 of 10

1. வாகன பார்க்கிங்கிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்க தயாரா?

2. தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருட்களை எம்.ஆர்.பி விலையில் விற்க தயாரா?

3. வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப் பொருட்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற சட்டத்திற்கு புறம்பான போக்கை மாற்ற தயாரா?

4. தியேட்டர் கவுண்டரில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்கத் தயாரா?

5. சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கருப்பு பண பரிமாற்றம் செய்ய மாட்டோம் என்று திரை நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்கத் தயாரா?

நியாயமான இந்தக் கேள்விகளுக்கு திரையரங்க உரிமையாளர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?