ரம்யா நம்பீஸனுக்கு முத்தம் கொடுக்க மறுத்த சிபிராஜ்! : என்ன காரணம் தெரியுமா?

0

”சைத்தான்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ”சத்யா” படத்தில் நடித்து வருகிறார் சிபிராஜ்.

ரம்யா நம்பீஸன், வரலட்சுமி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை நாதாம்பாள் பிலிம் பேக்டரி சார்பில் சத்யராஜ் தயாரிக்கிறார்.

சொந்தத் தயாரிப்பு தான் என்றாலும் இப்படத்திற்காக ரம்யா நம்பீஸனுக்கு லிப் லாப் கொடுக்கிற வாய்ப்பு வந்தும் அதை வேண்டவே வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் சிபிராஜ்.

இதுபற்றி டைரக்டர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்ட போது ”இந்தப் படத்தில் நடித்ததை பொறுத்தவரை சிபிராஜ் சார் மீது எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்றுக்கு லிப் லாக் முத்த காட்சி தேவையானதாக இருந்தது , சிபிராஜிடம் நான் அந்த காட்சியில் நடிப்பது பற்றி கூறியதும் என்னால் நடிக்க முடியாது ஸாரி என்று கூறி விட்டார்.

நான் எவ்வளவோ அவரிடம் அந்த காட்சியின் முக்கியத்துவத்தை விளக்கியும் அதில் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார். அவர் லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்ததற்கான காரணம் “அவருடைய மகன் அதை திரையரங்கில் பார்த்தால் நன்றாக இருக்காது” என்பதால் தான்.

என்று சொன்ன பிரதீப் ”சத்யா” திரைப்படம் ஜூன் மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு “555” புகழ் சைமன் இசையமைத்துள்ளார், அவருடைய இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக வந்துள்ளது என்கிற கூடுதல் தகவல்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

Leave A Reply