ஓவியாவுடன் எப்போது திருமணம்? : சிம்புவுக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லையாம்..!

0

simbu1

வியாவுக்கு ரசிகர்கள் மட்டும் இல்லாமல்  திரையுலக பிரபலங்களும் கூட அவருடைய ரசிகராகவே மாறிப்போனார்கள். சிலர் ஓவியாவுக்கு ஆதரவான கருத்துகளையும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தனர்.

அந்த பிரபலங்களில் சிம்பு பெயரில் வெளியான ஒரு கமெண்ட் தான் சிம்புவையே டென்ஷனாக்கியிருக்கிறது.

சில தினங்களுக்கு முன்பு ”ஓவியா போன்ற ஒரு பெண் கிடைப்பது அரிது. அவரை திருமணம் செய்ய தயாராக உள்ளேன்.” அவர் வெளியில் வந்தால் அவரை நான் திருமணம் செய்வது குறித்து பேசுவேன்’’ என்று சிம்புவின் பெயரிலேயே ஒரு ட்வீட் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

கிட்டத்தட்ட அது சிம்புவுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டிலிருந்தே வெளியானது போல இருந்ததால் சிம்பு தான் அதை போட்டிருப்பார் என்று எல்லோரும் நம்பினார்கள். தற்போது ”அது நான் போட்ட ட்வீட் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு.

இதுகுறித்து சிம்பு மேலும் கூறியிருப்பதாவது :

”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்பட வைக்கும் செய்தி.

பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கவுண்ட் மூலம் இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை, அனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும் உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான்.

இதுபோல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கவுண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அனைத்து ஊடக நண்பர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”. இவ்வாறு சிம்பு விளக்கமளித்துள்ளார்.

Leave A Reply