Banner After Header

சிந்துபாத் – விமர்சனம் #Sindhubaadh

0

RATING 3/5

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – அருண்குமார் காம்பினேஷனில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த ‘சிந்துபாத்’.

படத்தின் டைட்டிலிலேயே கதையை யூகித்து விடலாம். தினத்தந்தி ‘கன்னித்தீவு’ படக்கதையின் ஹீரோ சிந்துபாத் தனது மனைவி லைலாவைத் தேடிப் போவார். அப்படி ஒரு கதை தான் இந்தப்படமும்.

அக்காவின் கணவர் வாங்கிய கடனுக்காக மலேசியாவில் ரப்பர் தோட்ட வேலைக்குச் செல்கிறார் அஞ்சலி. விடுமுறையில் ஊருக்கு வருபவர் மீண்டும் மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் அஞ்சலி அங்கு மனிதத் தோல்களை காஸ்மெடிக் சிகிச்சைக்காக சட்டத்துக்குப் புறம்பாக ஏற்றுமதி செய்யும் கும்பலிடம் மாட்டிக் கொள்கிறார்.

ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தால் தான் விடுவிக்கப்படுவார் என்கிற சூழலில், தன் மனைவியை கடல் கடந்து சென்று தன் மனைவியை விஜய் சேதுபதி மீட்டாரா? இல்லையா? என்பதே கிளைமாக்ஸ்.

காதுகேளாதவராக வரும் விஜய் சேதுபதி வழக்கம் போல தனது கேரக்டரில் கேஷுவலாக நடித்து கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் ஹீரோயிசம் தெறிக்கிறது. அவரும், அவருடைய நிஜ மகனான சூர்யா விஜய் சேதுபதி மற்றும் ஜார்ஜ் ஆகியோர் கூட்டணி முதல் பாதியில் சேர்ந்து அடிக்கும் லூட்டி காமெடி சரவெடி. ஆனால் மூவருக்கு என்ன உறவுமுறை என்கிற எந்த டீடெய்லும் இல்லை.

முதல் படம் போல இல்லாமல் தனது அப்பாவையே சாப்பிட்டு விடுவது போல நடிப்பில் யதார்த்தம் காட்டி நடித்திருக்கிறார் சிறுவன் சூர்யா விஜய் சேதுபதி.

சாதாரணமாகப் பேசினாலே சத்தமாகப் பேசும் வாயாடிப் பெண்ணாக வரும் அஞ்சலி ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் கேரக்டரை ஞாபகப்படுத்துகிறார்.

மகளை எப்படியாவது மீட்க வேண்டுமென்று போராடும் விவேக் பிரசன்னா நெகிழ வைக்கிறார்.

இது போன்ற கமர்ஷியல் படங்களில் லாஜிக் மிஸ்டேக்ஸ் காணப்படுவது வழக்கம் தான். ஆனால் இந்தப் படத்தில் பளிச்செனத் தெரிவது பலவீனம்.

அதிலும் மலேசியாவில் அவ்வளவு பெரிய டானாக இருக்கும் வில்லனை உண்டி வில்லாம் சிறுவன் சூர்யா அடிக்கிற காட்சிகளெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவில் கம்போடியா, தாய்லாந்து, மலேசியா நாடுகளின் அழகை ரசிக்க முடிகிறது. யுவனின் இசையில் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசை மிரட்டலோ மிரட்டல்.

முதல் பாதியில் இருந்த கலகலப்பும், விறுவிறுப்பும் இடைவேளைக்குப் பிறகான இரண்டாம் பாதியில் சுத்தமாக காணாமல் போய்விடுகிறது. அதனாலேயே படத்தோடு ஒன்றிப்பார்க்கும் மனநிலை போய், படம் எப்போது முடியும் என்கிற மனநிலை வந்து விடுகிறது.

ஹீரோயிசப் படங்கள் வருவதை தவிர்க்க முடியாது என்றாலும் கதைக்களமாவது புதிதாக இருக்கலாம். இனி இயக்கப் போகும் படங்களிலாவது இந்த பலவீனத்தை இயக்குனர் அருண்குமார் சரி செய்வார் என்று நம்புவோம்.

சிந்துபாத் – களைப்பான பயணம்!

Leave A Reply

Your email address will not be published.