ஓவியாவைப் பற்றி மனம் உருகிய சிவகார்த்திகேயன்!

0

சினிமாவில் வந்தால் தான் உலகம் முழுக்க புகழ் பெற முடியும் என்கிற எண்ணத்தை தவிடு பொடியாக்கியவர் நடிகை ஓவியா.

‘களவாணி’ உட்பட பல படங்களில் நடித்த போது ஓவியாவுக்கு கிடைக்காத பேரும், புகழும் விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே தற்போது உருவாகியிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவரோடு இணைந்து பணியாற்றிய பலரும் அவரைப் பற்றி அவ்வப்போது சிலாகித்து பேசி வருகிறார்கள். அப்படி அண்மையில் தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் ஓவியாவைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

“என்னுடைய முதல் பட நாயகி ஓவியா தான். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் அவருடைய அம்மா இறந்த விஷயமே எனக்குத் தெரிய வந்தது. மெரினா பட வேலைகளில் எப்போதும் அவர் எங்களுடன் இருப்பார். நான், ஓவியா, சதீஷ் மூன்று பேரும் கூட அவருக்கு உதவியாக இருப்போம்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்த ஓவியா வெளியே வந்ததும், போன் செய்து பேசினேன். என்னுடைய முதல் பட நாயகி ஓவியாவுடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்பேன்” என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Leave A Reply