மோதத் தயாராகும் ஏ.ஆர்.முருகதாஸ், பாலா, விக்ரம் : சிவகார்த்திகேயன் படத்துக்கு சிக்கலா?

0

siva1

ந்த ஹீரோவை நம்பிப் பணம் போட்டால் லாபம் நிச்சயம் என்று தயாரிப்பாளர்கள் நம்பும் ஒரு சில ஹீரோக்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன்.

அந்தளவுக்கு கியாரண்டி ஹீரோவான சிவகார்த்திகேயனின் ”வேலைக்காரன்” படத்துக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் வில்லனாக நடித்திருக்கும் இப்படத்தை மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, வருகிற செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது.

இந்த ரிலீஸ் தேதியை பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டது தயாரிப்பு நிறுவனம். அப்படியிருந்தும் ”வேலைக்காரன்” ரிலீசாகும் அன்றைய தினத்தில் அடுத்தடுத்து மூன்று பெரிய படங்களும் ரிலீசுக்கு தயாராகி வருகிறதாம். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘ஸ்பைடர்’, பாலா இயக்கி வரும் ‘நாச்சியார்’ , விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் ஆகிய படங்கள் தான் அவை.

இந்தப் படங்கள் ரிலீசானால் ”வேலைக்காரன்” படத்துக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

 

Leave A Reply