Banner After Header

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த யோகிபாபு – சூரி!

0

ன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “எஸ்.கே 16” படத்தின் படப்பிடிப்பு மே 8-ம் தேதி துவங்கியது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எந்திரன், சர்கார், பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நான்காவது படம் இது. சன் பிக்ச்சர்ஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள்.

சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்த படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார்.

இது அவரது இரண்டாவது தமிழ்ப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ‘கனா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நடராஜ், ஆர்.கே சுரேஷ், காமெடி நடிகர்களான சூரி, யோகி பாபு மற்றும் வேல ராமமூர்த்தி, ‘நாடோடிகள்’ கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையாக தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.