150 டான்சர்ஸ், 1500 துணை நடிகர்களைக் கொண்டு படமாக்கப்பட்ட ‘ஸ்கெட்ச்’ பாடல் காட்சி!

0

Sketch

விக்ரம் – தமன்னா முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’. இவர்களுடன் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா, விஷ்வாந்த், பாபுராஜா, வினோத், வேலராமமூர்த்தி, சாரிகா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பிரியங்கா நடிக்கிறார்.

வட சென்னையை கதைக்களமாகக் கொண்டு தயாராகி வரும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்துக்காக “அச்சி புச்சி ஸ்கெட்சு” என்ற பாடல் பிரம்மாண்டமான அரங்கத்தில் 150 நடன கலைஞர்கள் மற்றும் 1500 துணை நடிகர்களுடன் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

எஸ்.எஸ்.தமன் இசையமைப்பில், கபிலன், விவேக், விஜய்சங்கர் ஆகியோரது பாடல் வரிகளில் உருவாகும் ‘ஸ்கெட்ச்’ படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரூப படத்தொகுப்பு செய்கிறார். மாயா பாண்டியன் கலையை நிர்மாணிக்க, பிருந்தா, தஸ்தாகீர் நடனம் அமைக்கின்றனர். சுப்ரீம் சுந்தர், ரவிவர்மன் ஆகியோர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி விஜய்சந்தர் இயக்குகிறார்.

Leave A Reply