Banner After Header

ஸ்பைடர் – விமர்சனம்

0

SPYDER-REVIEW1

RATING : 3/5

நட்சத்திரங்கள் : மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி மற்றும் பலர்

இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்

வகை : ஆக்‌ஷன் \ த்ரில்லர்

சென்சார் சர்ட்டிபிகேட் : ‘U/A’

கால அளவு : 2 மணி நேரம் 25 நிமிடங்கள்

ன்டெலிஜென்ட்ஸ் பிரிவில் வேலை செய்யும் மகேஷ்பாபுவுக்கு பொதுமக்களின் போன் கால்களை ஒட்டுக் கேட்பது தான் வேலை.

அந்த போன்கால்களை ஒட்டுக்கேட்பதோடு மட்டும் நின்று விடாமல் சம்பந்தப்பட்டவர்கள் ஏதேனும் ஆபத்தில் இருக்கிறார்களா? என்பதை அவர்கள் பேசுவதை வைத்தே எச்சரிக்கும் மென்பொருள் ஒன்றையும் கண்டு பிடிக்கிறார்.

அதை வைத்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல் என யார் எந்த பிரச்சனையில் சிக்கியிருந்தாலும் அடுத்த நிமிடம் அந்த ஸ்பாட்டுக்கு சென்று உதவி செய்பவர்.

ஒருநாள் பள்ளி மாணவி ஒருவர் எல்லா வீட்டிலும் கரண்ட் இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டில் மட்டும் கரண்ட் இல்லை, இங்கு பேய் இருப்பது போலத் தோன்றுகிறது. அதனால் எனக்குப் பயமாக இருக்கிறது. துணைக்கு நீ என் வீட்டுக்கு வர முடியுமா? என்று அவளது தோழியிடம் கேட்கிறாள்.

அதை ஒட்டுக் கேட்கும் மகேஷ்பாபு தனது போலீஸ் தோழி ஒருவருக்கு போன் செய்து அந்தப் பெண் வீட்டுக்கு பாதுகாப்புக்கு போகும்படி கேட்கிறார்.

மறுநாள் அந்த வீட்டில் இருந்த பள்ளி மாணவியும், அந்த பெண் போலீஸும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கிறார்கள்?

யாருமே செய்யத் துணியாத அந்தக் கொடூரமான கொலைகளைச் செய்தது யார்? என்று கண்டிபிடிக்க இறங்கும் போதுதான் அதன் பின்னணியில் எஸ்.ஜே.சூர்யாவும் சில காட்சிகளே வந்து போகும் அவரது தம்பியான பரத்தும் இருப்பது தெரிய வருகிறது.

அவர்களின் அடுத்தடுத்த கொலைத் திட்டங்கள் என்னென்ன? அதை எப்படி தனது புத்திசாலித்தனத்தால் மகேஷ்பாபு முறியடிக்கிறார் என்பதே கிளைமாக்ஸ்.

தெலுங்கு பட உலகில் மாஸ் ஹீரோவாக இருக்கும் மகேஷ்பாபுவுக்கு இது முதல் நேரடித் தமிழ்ப்படம். வழக்கமான தெலுங்கு மசாலாப்படத்துக்குரிய ஓவர்டோஸ் ஆக இல்லாமல் கேரக்டருக்கு தேவையான அலட்டல் இல்லாத நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படி ஒரு கொடூர வில்லனா? என்று பார்த்தவுடன் குலை நடுங்குகிற அளவுக்கு கண்களாலேயே மிரட்டியிருக்கிறார் வில்லனாக வரும் எஸ்.ஜே.சூர்யா. குறிப்பாக மற்றவர்கள் அழுவதைப் பார்த்து அதே மாதிரி அழுவதைப் போல லேசான சிரித்துக் கொண்டே முகத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிற காட்சிகளில் தேர்ந்த நடிகரைப் போல நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். அந்தக் காட்சிகளில் தியேட்டரில் கைதட்டல்கள்!

இப்படி எஸ்.ஜே.சூர்யாவுக்கு கைதட்டல் கிடைக்கிற அளவான கேரக்டர் என்றாலும் பாவம் அவரது தம்பியாக வரும் பரத்துக்குத்தான் சின்னதாய் ஒரு கேரக்டர். சில சீன்களே வந்து விட்டு மகேஷ்பாபுவின் ஒரு துப்பாக்கிக் குண்டுக்கு பொட்டென்று போய் விடுகிறார்.

ஹீரோயினும் வேண்டுமே என்பதற்காகவே படத்தில் வருகிறார் ரகுல் ப்ரீத் சிங். மகேஷ்பாபுவுடன் டூயட் பாடுவது, சில காட்சிகளில் அவரோடு சேர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுப்பது இதைத்தாண்டி அவரைப் பற்றி எழுத படத்தில் வேறு ஒன்றுமில்லை.

வில்லன் எஸ்.ஜே.சூர்யாவின் கேரக்டருக்காக அவருடைய ப்ளாஷ்பேக் காட்சியில் வருகிற சின்ன வயசு எஸ்.ஜே.சூர்யா முகத்தில் காட்டுகிற வன்மமும், தெரிகிற ஆவேசமும் அப்பப்பா… செம மிரட்டல்!

அட… ஆர்.ஜே.பாலாஜியா இது? என்கிற சந்தேகத்தையே கிளப்பி விடுகிறது அதிகம் பேசாமல் படம் முழுக்கவே வரும் அவருடைய கேரக்டர்.

எஸ்.ஜே.சூர்யாவை கண்டுபிடித்தவுடன் மாஸாக ஒரு பெரிய பைட் சீனைப் போட்டு படத்தை முடித்திருந்தால் விறுவிறுப்பின் உச்சமாக இருந்திருக்கும் இந்த ஸ்பைடர். ஆனால் அதற்குப் பிறகும் சில காட்சிகளை வைத்து இழுஇழுவென்று இழுத்தது தான் ஹீரோ

ரோலட் ஹோஸ்ட்டில் நடக்கும் சண்டைக் காட்சியில் தனது தனித்தன்மையான உழைப்பை கொட்டியிருக்கிறார் பைட் மாஸ்டர் பீட்டர் ஹெயின்.

ஹாஸ்பிட்டல் இடிந்து விழும் காட்சி, இண்டலிஜெண்ட் அலுவலகத்தின் பிரம்மாண்ட உட்புறத் தோற்றம், பெரிய சைஸ் பாறாங்கல் உருண்டு வருவது போன்ற காட்சிகளில் சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு அபாரம்.

மாஸ் ஹீரோக்களின் படங்களில் லாஜிக் மீறல்களைப் பார்க்கக் கூடாது தான். அதற்காக அத்தனை போலீஸ்களுக்கு மத்தியிலும் எஸ்.ஜே.சூர்யா எளிதாகத் தப்பிப்பது, மருத்துவமனைக்கு குண்டு வைப்பது, ஆட்களை கொலை செய்து மெட்ரோ ரயில் தூண்களில் புதைத்து வைத்திருக்கிறேன் என்று எஸ்.ஜே.சூர்யா சொல்வது என்று பூச்சுற்றுவதையெல்லாம் எப்படி மன்னிப்பது? அதுவும் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பேர் பெற்ற இயக்குநர்கள் கொஞ்சமாவது யதார்த்தமாக யோசிக்க வேண்டாமா?

ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பின்னணி இசை ஒரு த்ரில்லர் படத்துக்குரிய டோனில் பரபரக்க வைக்கிறது. பாடல்களில் தெலுங்கு படங்களின் வாடை அப்பட்டம்.

மகேஷ்பாபுவுக்கு தமிழில் முதல் நேரடி அறிமுகம். அதற்காக அவரை கொஞ்சம் அடக்கியே வாசிக்க வைத்திருக்கிற ஏ.ஆர்.முருகதாஸ் முன்பின் தெரியாத ஒருவருக்கு நாம் செய்யும் உதவி தான் மனிதாபிமானம் என்கிற தனது வழக்கமான ஸ்டைலில் மெசேஜ் ஒன்றையும் சொல்லத் தவறவில்லை.

ரசிகர்களை தொழில்நுட்பத்தில் மிரட்டுவதற்காக மூளையைக் கசக்கியவர் நம்பும்படியாக காட்சிகளிலும் திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் ஸ்பைடர் விரித்த வலையில் ஒட்டுமொத்த ரசிகர்களும் வந்து விழுந்திருப்பார்கள்!

Leave A Reply

Your email address will not be published.