Banner After Header

பொது அறிவோடு வருமானத்தையும் தரும் சுரேஷ் சந்திர மேனனின் ‘மை கர்மா ஆப்’!

0

டிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர் என பன்முகம் கொண்ட சுரேஷ் சந்திரமேனன் இன்றைய இளைய தலைமுறையின் பொது அறிவுக்காக புது மொபைல் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

கடந்த 40 வருடங்களாக இயக்குநர், நடிகர், டிவி சீரியல், டாகுமெண்டரிகள் என சினிமா துறையில் பயணித்து வரும் இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடித்தார்.

தொடர்ந்து சினிமாவை தாண்டி தன்னை ஒரு நல்ல குடிமகனாக நற்பணிகளில் ஈடுபடுத்தி கொள்ளும் இவர் சமூக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தில் வரும் இவர் தனது புது முயற்சியாக இளைய தலைமுறையின் பொது அறிவு, சமூக விழிப்புணர்வுகளை மேம்படுத்த ‘ மை கர்மா ஆப்’ என்ற புதிய மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது, ”இன்றைய இளைஞர்கள் பொது அறிவு பற்றிய புரிதலோ ஈடுபாடோ இல்லாமல் உள்ளனர். அவர்களை ஈர்க்க இந்த மாதிரி ஒரு ‘செயலி’ உருவாக்க நினைத்தேன் .

உலகமே மொபைல் தான் என்ற நிலை வந்து விட்டது. இந்த ‘மை கர்மா ஆப்’ என்ற பொது அறிவு விளையாட்டின் மூலம் தெரியாத பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். Learn, Earn, Return என்பது தான் இந்த செயலியின் Tagline.

தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை இந்த பொது அறிவு விளையாட்டை விளையாடலாம். இந்த செயலியில் உள் நுழைந்து உங்களது பெயரையும், மொபைல் போன் நம்பரையும் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்பு அதில் இருக்கும் வழியின்படி பணம் கட்டிவிட வேண்டும். ஒரு கேள்விக்கு 2 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டிருக்கும். பதிலைச் சொல்வதற்கு உங்களுக்கு 10 நொடிகள் மட்டுமே அவகாசம் தரப்படும். தவறான பதிலைச் சொன்னால் மொத்தப் பணத்தில் இருந்து 2 ரூபாய் மைனஸ் செய்யப்படும். சரியான பதிலைச் சொன்னால் பரிசுப் பணம் உங்களுடைய அக்கவுண்ட்டில் ஏற்றப்படும். இதில் கேட்கப்படும் 90 சதவிகித கேள்விகள் இந்தியாவை பற்றியதாகத்தான் இருக்கும். இதுவரையிலும் 4000 பேர் இந்த செயலியை டவுண்லோடு செய்திருக்கிறார்கள்.

ஒரு சில நண்பர்களின் பொருளாதார பங்களிப்புடன் இதை உருவாக்கி இருக்கிறோம், இளைஞர்கள் என்னுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.