சித்தார்த் படத்தில் யோகிபாபுவிற்கு இரண்டு வேடம்

தற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபு இருக்கிறார். தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி வருவதாக இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நம்புகிறார்கள். அவரும் அதை ஓரளவு நிவர்த்தி செய்துவருகிறார். தற்போது அவர் திரைப்படங்களில் முழு நாயகனாகவும் நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் G கிரிஷ் இயக்கும் “டக்கர்” படத்தில் அப்பா மகன் என இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார் யோகிபாபு.

“அவரது கேரக்டர் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் அதே நேரம், வயிறு குலுங்க வைக்கும் காமெடி கலாட்டாவாகவும் இருக்கும். திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும்” என்கிறார் இயக்குநர்