‘தளபதி 64’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு – 2020 சம்மர் ரிலீஸ்!

ட்லி இயக்கத்தில் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கப் போகும் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்று தகவல்கள் வெளியானது.

‘தளபதி 64’ என்று தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Related Posts
1 of 239

‘மாநகரம்’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தி நடிப்பில் ‘கைதி’ படத்தை இயக்கி வருகிறார். அந்தப்படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் மூன்றாவதாக இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்கிறார்கள். ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது.

படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் 2019 ஆரம்பமாகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 2020 ல் கோடை கொண்டாட்டமாக படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.