‘தளபதி 64’ சீக்ரெட்டை உடைத்த டைரக்டர்!

தீபாவளிக்கு வெளியாகும் ‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய்.

இப்படத்தின் கதை விவாதம், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு ஆரம்பக்கட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ”மாநகரம்” என்ற மாபெரும் வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குனர் என்பதால் இந்தப்படம் எப்படிப்பட்ட படமாக இருக்குமென்று ரசிகர்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

Related Posts
1 of 238

வழக்கமான விஜய் படமாக இல்லாமல் அதே சமயம் காமெடி தூக்கலாகவும், குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படமாக இருக்கும் என்றும் படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே ”தளபதி 64” படம் இதுவரை பார்க்காத விஜய் படமாக இருக்குமென்றும், இதில் ரசிகர்கள் இதுவரை பார்க்காத விஜய்யை பார்ப்பார்கள். அதற்கு நான் கியாரண்டி” என்று தெரிவித்திருக்கிறார் லோகேஷ் கனஜராஜ்.