படத்த கெடுக்கிற எல்லா வேலையும் பார்ப்பேன்- தம்பி பட விழாவில் சத்யராஜ் பேச்சு


கார்த்தி, ஜோதிகா அக்கா- தம்பியாக முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம் தம்பி. பாபநாசம் ரீமேக் மூலம் தமிழில் அறிமுகமான இயக்குநர் ஜீத்து ஜோசப் முதல்முறையாக இயக்கும் நேரடி தமிழ்ப்படம் தம்பி. சௌகார் ஜானகி, சத்யராஜ், நிகிலா விமல், ரமேஷ் திலக் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு நடிகர் சத்யராஜ் பேசியதாவது,

சத்யராஜ் பேசியதாவது…

Related Posts
1 of 47

“ஒரு குடும்பம் தொடர்ந்து என்ன பயமுறுத்திட்டு இருக்குனா அது சிவக்குமார் குடும்பம் தான். அவர் மாதிரி ஒரு நல்ல நடிகனா இருக்க முடியுமா பயம், அவர் மாதிரி பிள்ளைகள் வளர்க்க முடியுமா பயம். இப்படி தொடர்ந்து பயமுறுத்திட்டு இருக்காங்க. இந்தப்படத்தோட இயக்குநர் ஜீத்து ஜோசப்போட பாபநாசம் மூணு மொழில பார்த்தேன். அவர் கூட வேலை செய்ய முடியுமானு நினைச்சேன். இந்தப்படம் வாய்ப்பு கிடைச்சது. இதுல எனக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம்.

சாராசரி பாத்திரம் பண்றதுல எனக்கு விருப்பம் இல்ல ஆனா இந்தப்படத்துல பாகுபலி மாதிரி ஒரு வித்தியாசமான, நடிப்புக்கு வாய்ப்புள்ள படம். இயக்குநர் தனக்கு என்ன வேணுங்கறதுல தெளிவா இருப்பார். நான் அதிகமா இன்வால்வாகி கொஞ்சம் ஓவரா நடிச்சுடுவேன் ஆனா அவர் அதெல்லாம் வேணாம்னு ஒரே வார்த்தையில் சொல்லிடுவார். நான் அப்படி தான் படத்த கெடுக்கிற எல்லா வேலையும் பார்ப்பேன் அதையெல்லாம் கட்டுபடுத்தி என்ன இந்தப்படத்துல நடிக்க வச்சிருக்காங்க. இந்தப்படத்தில நடிச்சது ரொம்ப சந்தோஷம் நன்றி” என்றார்